திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3381 | திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (இராம பிரானுடைய ஒரு விலக்ஷ்ணமான தன்மையை யருளிச் செய்கிறாரிதில்.) 1 | கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–7-5-1 | பதவுரை Show / Hideபுல் பா முதல் ஆ,Pul paa mudhal aa - புல்லாகிற பதார்த்தம் முதலாகவும் புல் எறும்பு ஆதி,Pul erumbu aadhi - மிக அற்பமான எறும்பு முதலாகவும் நல் பால் அயோத்தியில் வாழும்,Nal paal ayothiyil vaazhum - (ராமகுணங்கள் நடையாடுகிற) நல்ல தேசமான அயோத்யாபுரியில் வாழ்கிற சராசரம முற்றவும்,Saraasaram mutravum - ஸ்தாவர ஜங்கமங்களானவை யெல்லாவற்றையும். ஒன்று இன்றியே,Ondru indriye - ஒருவிதமான ஸாதநாநுஷ்டானமுமில்லாமலிருக்கச் செய்தேயும் நான் முகனார் பெற்ற நாட்டுளே,Naan muganaar petra naattule - பிரமன் படைத்த இவ்வுலகுக் குள்ளே நல பாலுக்கு உய்த்தனன்,Nal paalukku uyiththanan - நல்ல ஸ்வபாவத்தையுடைத்தாம் படி பண்ணினான்; கற்பார்,Karpaar - (ஆதலால்) (உலகில்) கற்க விரும்பு மவர்கள் இராமபிரானை அல்லாமல் மற்றும் கற்பரோ,iraamapiraanai allaamal matrum karparo - (குணக்கடலாகிய) ஸ்ரீராமனைத் தவிர மற்றொரு வ்யக்தியைக் கற்க நினைப்பர்களோ? |