திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3384 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3384திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (ப்ரளயத்திலே மங்கிக் கிடந்த ஜகத்தை மீளவு முண்டாக்கின மஹா குணத்தை யறிந்து வைத்தால் இப்படிப்பட்ட குணசாலிக்கே யன்றோ ஆளாகப் பெற வேணுமென்கிறார்.) 4
தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆளன்றி ஆவரோ? பன்மைப் படர் பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்து நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் தன்னுள்ளே தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே.–7-5-4
பதவுரை Show / Hide
பன்மை படர் பொருள் ஆதும் இல்பாழ் நெடுங்காலத்து,Panmai padar porul aadum ilpaazh nedungkaalathu - பலவகைப்பட்ட விரிவான பதார்த்தங்கள் ஒன்றுமில்லாதபடி வெகுகாலம் சூந்யமாயிருந்தபோது
நன்மை புனல் பண்ணி,Nanmai punal panni - நன்மை மிகுந்த காரணஜலத்தை முந்துற முன்னம் ஸ்ருஷ்டித்து
நான்முகனை பண்ணி,Nanmukanai panni - (பிறகு) பிரமனைப் படைத்து
தன் உள்ளே,Than ullae - தன்னுடைய ஸ்வருபத்தின் ஏகதேசத்திலே
தொன்மை மயக்கிய,Thonmai mayakkiya - பண்டு தான் ஸம்ஹரித்த பதார்த்களை
தோற்றிய,Thotriya - பழையபடி உண்டாக்கின
சூழல்கள்,Soozhhalgal - இப்படிப்பட்ட மஹா குணங்களை
சிந்தித்து,Sindhiththu - சிந்தனை செய்து
தன்மை அறிபவர் தாம்,Thanmai aripavar tham - அவனுடைய அஸாதாரண லக்ஷ்ணத்தை அறியவல்லவர்கள்
அவற்கு அன்றி ஆள் ஆவரோ,Avarku anri aal aavaro - அப்பெருமானுக் கொழிய வேறொருவனுக்கு அடிமைப்படலாகுமோ?