திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3387 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3387திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (தேவதாந்தர பஜநம் பண்ணிக் கிடந்த மார்க்கண்டேயனை விஷயீதரித்தலாகிற மஹா குணத்தை யநுஸந்தித்தால் அப்பெருமானுக்கன்றி யாளாவரோ வென்கிறார்.) 7
கண்டு தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ? வண்டுண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழு நாள் இண்டைச் சடை முடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்லக் கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே.–7-5-7
பதவுரை Show / Hide
வண்டு உண் மலர் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு,Vandu un malar thongal maarkkandeyanukku - வண்டுகள் மதுபானம் பண்ணுகிற பூமாலையையுடைய (பாலகனான) மார்க்கண்டேயனுக்கு
வாழும் நாள்,Vaalum naal - ஆயளுக்காக
இண்டை சடை முடி ஈசன்,Indai sadai mudi eesaan - நிபிடமான ஜடாமண்டலத்தையுடையவரான சிவபிரான்
உடன் கொண்டு உசா செல்ல அங்கு,Udan konda ushaa sellu anggu - தன்னோடுகூட அவனை யழைத்துக்கொண்டு பேசிக்கொண்டே செல்ல அந்நிலையிலே
கொண்டு,Konda - அவனை விஷயீகரித்து
தன்னோடும் கொண்டு,Thannodum konda - தன்னோடே கூட்டிக் கொண்டு
உடன் சென்றது,Udan sendradhathu - பிரியாதே யிருந்த படியை
உணர்ந்தும்,Unarnthum - புராணாதி முகத்தாலேயறிந்தும்
கண்டும் தெளிந்தும் கற்றார்,Kandum thulindhum katraar - கண்ணாரக் கண்டும் நெஞ்சாரத்தெளிந்தும் கற்றவர்கள்
கண்ணற்கு அன்றி ஆள் ஆவரோ?,Kannarkku anri aal aavaro? - கண்ணபிரானுக்கல்லது வேறொருவர்க்கு அடிமை யாவரோ