| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3392 | திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (ஒவ்வோரவயத்தாலும் ஒவ்வோர் அதிமாநுஷ சேஷ்டிதத்தைச் செய்தருளின் பரம போக்யனான வுன்னை நான் என்றைக்குக் கிட்டுவதென்கிறார்.) 1 | பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ! பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ! தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ! தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1 | பாமரு மூவுலகும் படைத்த பற்பநாபா ஓ,Pamaru mooulagum padaitta parpanaba o - பலவகைப் பொருள்களும் நிரம்பியுள்ள மூவுலங்களையுமுண்டாக்கின ஓ பத்ம நாபனே! பாமரு மூ உலகும் அளந்த பற்பம் பாதா ஓ,Pa maru moo ulagum alandha param pada o - பரம்பின மூவுலங்களையு மளந்து கொண்ட திருவடித்தாமரைகளை யுடையவனே! தாமரை கண்ணா ஓ,Thamarai kannaa o - செந்தாமரைபோன்ற திருக்கண்களை யுடையவனே! தனியேன் தனி ஆளா ஓ,Thaniyena tani aala o - துணையற்றவனான என்னை அஸாதாரணமாக ஆள்பவனே! தாமரை கையா ஓ,Thamarai kaiyaa o - செந்தாமரைக் கையனே! உன்னை சேர்வது என்று கொல்,Unnai sera vadhu endru kol - உன்னை நான் சேரப் பெறுவது எந்நாளோ? |