திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3393 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3393திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (மீண்டும் அதுவே வாய் வெருவுதலாய்ச் செல்லுகிறார். கீழ்ப்பாட்டில் ‘என்றுகொல்சேர்வது’ என்றாரே; அதற்கு ஒரு மறுமாற்றம் பெற்றிலர். அத்தோடு அந்தோ என்பதையுங் கூட்டியழுகிறார். நான் மூடிந்ததென்கிறார்.) 2
என்று கொல் சேர்வது அந்தோ!அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருப் பாதத்தை யான்? நிலம் நீர் எரி கால் விண்ணுயிர் என்ற இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ! குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ!–7-6-2
பதவுரை Show / Hide
நிலம் நீர் எரி கால் விண்,Nilam neer eri kaal vin - பஞ்ச பூதங்களும்
உயிர்,Uyir - பிராணிவர்க்கமும்
என்ற இவை தாம் முதல் ஆ,Endra ivai thaam mudhal aa - ஆகிய இவை முதலாக
முற்றும்,Mutrum - ஸகல பதார்த்தங்களும்
ஆய் நின்ற எந்தாய் ஒ,Aay nindra endhaay o - தானே யென்னலாம் படி நின்ற ஸ்வாமியே!
ஆ நிரை மேய்தது,Aa nirai meydhadhu - பசுக்களின் கூட்டங்களை மேய்த்து
குன்று எடுத்து அவை காத்த,Kunru eduthu avai kaatha - கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்து அப்பசுக்களை ரக்ஷித்தருளின
எம் கூத்தா ஓ,Em koothaa o - குடக்கூத்து முதலிய கூத்துக்களில் வல்லவனான எம்பெருமானே!
அரண் நான் முகன் ஏத்தும்,Aran naan mukan etthum - சிவனும் பிரமனும் துதிக்கும்படியான
நின் செய்ய திரு பாதத்தை,Ninn seiya thiru paadhattai - உனது சேவடியை
யான் சேர்வது என்று கொல்,Yaan sera vadhu endru kol - யான் சேரப் பெறுவது எந்நாளோ?
அந்தோ,Antho - ஜயோ!