| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3394 | திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (குண்டுறடுத்தாநிரை மேய்த்து அவை காத்த வெங்கூத்தாவோ” என்று கோவர்த்தந உத்தரண வ்ருத்தாந்தத்தைக் கூறிக் கூவின ஆழ்வார் மீண்டுமிப்பாட்டிலும் “காத்தவெங்கூத்தாவோ மலையேந்திக் கன்மாரி தன்னை: என்று அது தன்னையே கூறிக் கூவுவது அந்தாதித்தொடை யமைதிக்காகவன்று; ஈடுபாட்டின் மிகுதியாலாம்.) 3 | காத்த எங் கூத்தாவோ! மலை ஏந்திக் கன் மாரி தன்னைப் பூத் தண் துழாய் முடியாய்! புனை கொன்றை யஞ் செஞ்சடையாய் வாய்த்த என் நான்முகனே! வந்து என் ஆருயிர் நீ ஆனால் ஏத்தருங் கீர்த்தியினாய்!உன்னை எங்குத் தலைப் பெய்வனே?–7-6-3 | மலை ஏந்தி கல்மாரி தன்னை காத்த எம்கூத்தா ஓ,Malai endhi kalmaari thannai kaatha emkoothaa o - கோவர்த்தனமலையைத் தாங்கிநின்று கல் மழையைத் தடுத்தவனும் கூத்தில் வல்லவனுமான என்பெருமானே! பூ தண் துழாய் முடியாய்,Poo than thuzhai mudiyaa - அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையைத் திருமுடியிலுடையவனே! புனை கொன்றை அம் செம்சடையாய்,Punai konrai am sem sadaiyaa - சிவந்த ஜடையிலே கொன்றைமாலையைப் புனைந்துள்ள சிவனுக்கு அந்தர்யாமியே! வாய்த்த என் நான்முகனே,Vaaytha en naanmukane - பிரமனுக்கு அந்தர் யாமியே! ஏத்த அருகீர்த்தியினாய்,Eththa arugeerthiyinaay - துதித்துத் தலைக்கட்ட முடியாத புகழையுடையவனை! நீ வந்து என் ஆர் உயிர் ஆனால்,Nee vandhu en aar uyir aanal - நீயாகவே பரகதஸ்வீகாரமாக வந்து எனக்குத் தாரகனாக ஆனாயான பின்பு உன்னை எங்கு தலைப்பெய்வன்,Unnai engu thalaippeivan - உன்னை எங்கே கிட்டியநுபவிப்பேன்? |