Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3395 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3395திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (ஸர்வ ஸ்மாத் பரனாய் ஆஸ்ரித பவ்யனாய் போக்யதை அளவிறந்திருப்பவனான வுன்னை அகிஞ்சநனான நான் எங்கே கிட்டுவதென்கிறார்.) 4
எங்குத் தலைப் பெய்வன் நான்! எழில் மூவுலகும் நீயே
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ
வெங்கதிர் வச்சிரக்கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ
கொங்கலர் தண் அந் துழாய் முடி என்னுடைக் கோவலனே!–7-6-4
கொங்கு அலர் தண் அம் துழாய் முடி என்னுடைகோவலனே,Kongu alar than am thuzhai mudhi ennutai kovalane - மதுவோடு கூடி மலர்ந்த செவ்வித் துழாயையணிந்த மயிர்முடியையுடையனாய் எனக்குப் பரம போக்யனான கோபாலக்ருஷ்ணனே!,
எழில் மூ உலகும் நீயே,Ezil moo ulagum neeye - விலக்ஷ்ணமான மூவுலகமும் நீயிட்ட வழக்காயிருக்கும்,
அங்கு உயர் முக்கண் பிரான்,Angu uyarr mukkan piran - அந்த லோகத்திலே உயர்ந்தவனான சிவ பிரானும்
பிரமன் பெருமான் அவன்,Braman peruman avan - அப்படிப்பட்ட நான் முகக்கடவுளும்
நீ,Nee - நீயிட்ட வழக்காயிருப்பர்கள்.
வெம் கதிர் வச்சிரம் கை இந்திரன முதலா தெய்வம் நீ,Vem kadhir vachchiram kai indhiran muthala deivam nee - வெவ்விய பிரதாபம் பொருந்திய வஜ்ராயுதத்தைக் கையிலேயுடைய இந்திரன் முதலான தெய்வங்களும் நீயிட்ட வழக்கே;
நான் எங்கு தலைப்பெய்வன்,Naan engu thalaippeivan - (ஆனபின்பு) நான் என் முயற்சியினாலேயே உன்னை வந்து கிட்டுவேனோ?