| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3397 | திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (உன்னைப் பெறுகைக்கு என்பக்கல் ஒர் உபாயமில்லை; நீயே வந்து விஷயீகரிக்கவேணுமென்கிறார்.0 6 | வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீலச் சுடர் தழைப்பச் செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல் அந்தர மேற் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய் செஞ்சுடர்ச் சோதி விட உறை என் திரு மார்பனையே.–7-6-6 | மல்கு நீலம் சுடர் தழைப்ப,Malgu neelam sudar thalaippa - குறைவற்ற நீலமான புகரானது மேன் மேலும் வளர, செம் சுடர் சோதிகள் பூத்த ஒரு மாணிக்கம் சேர்வது போல்,Sem sudar sodhigal pootha oru maanikkam sera vadhu pol - சிவந்த வொளியை யுடைத்தான சில கிரணங்களைப் பரப்பினவொரு மாணிக்கம், சாய்ந்து கிடக்குமாபோலே, அந்தரம் மேல்,Antharam mel - திருவரை மேல்சாத்தின செம் படடோடு,Sem padatodu - பீதாம்பரத்தோடு அடி உந்தி கை மார்பு கணவாய்,Adi undhi kai maarpu kanavaay - திருவடிகளும் திருவுந்தியும் திருக்கைகளும் திருமார்பும் திருக்கண்களும் திருப்பவளமுமாகிய வொளி செம் சுடர் சோதிவிட,Sem sudar sodhividu - சிவந்தழகிய வொளியைப் பரப்ப உறை என் திருமார்,Urai en thirumaar - எனது திருமாலை வந்து எய்தும் ஆறு அறியேன்,Vandhu eydhum aaru ariyen - வந்து கிட்டும் வகையறிகின்றிலேன். |