திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3398 | திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -ப்ரஹ்மாதிகள் உடைய போக்ய ஜாதமும் அவர்களுடைய அதி மானுஷ வ்ருத்திகளும் ஸ்வ அதீனமான இருக்கிறவனை நான் காணப் பெறேனோ -என்கிறார்.) 7 | என் திரு மார்பன் தன்னை என் மலைமகள் கூறன் தன்னை
என்றும் என் நா மகளை அகம்பாற் கொண்ட நான் முகனை
நின்ற சசி பதியை நிலங்கீண்டு எயில் மூன்று எரித்த
வென்று புலன் துரந்த விசும்பாளியைக் காணேனோ?–7-6-7 | பதவுரை Show / Hideஎன் திரு மார்பன் தன்னை,En thiru maarban thannai - திருமாலாயிருக்கிற தன்மையை எனக்கு ப்ரகாசிப்பித்தவனும் என் மலை மகள் கூறன் தன்னை,En malai magal kooran thannai - பார்வதீபதியை ப்ரகாரமாகவுடையனாயிருக்கிறபடியை யெனக்கு ப்ரகாசிப்பித்தவனும் என்றும் நாமகளை அகம்யால் கொண்ட என் நான் முகனை,Endrum naamagalai agamyaa'l kondha en naan mukanai - எப்போதும் ஸரஸ்வநியை அந்தரங்க மஹிஷியாகக் கொண்ட நான்முகனை ப்ரகாரமாவுடை யனாயிருக்கிறபடியை எனக்கு ப்ரகாசிப்பித்தவனும். நின்ற சசீ பதியை,Nindra Sasi padhiyai - இவர்களோடு எண்ணப்பட்டு நிற்கின்ற இந்திரனுக்கு அந்தர்யாமியானவனும் நிலம் கீண்ட,Nilam keennda - (மஹாவராஹமாகி) பூமியை யுத்தரித்தவனும் மூன்று எயில் எரித்த,Moontru eyil eritha - த்ரிபுரதஹனம பண்ணினவனும் புலன் வென்று துரந்த,Pulan vendru thurandha - இந்திரியங்களை ஜயித்து ஓட்டினவனும் விசும்பு ஆளியை,Visumpu aaliyai - சுவர்க்கத்தை ஆள்கின்ற இந்திரனுக்கு அந்தர்யாமியுமான எம்பெருமானை காணனோ –,Kaanaano - காணமாட்டேனோ? |