| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3401 | திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (ஸ்ரீ ஆறாயிரப்படி -ஸ்ரீ நந்த கோப குமாரனாய் வந்து பிறந்து அருளி திண் கொள் அசுரரைத் தேய வளர்ந்து அருளி பந்தய ரூபேண போய்ப் புக்கு பிரதிகூலனான கம்சனை வஞ்சித்துக் கொன்று அருளி பின்னை பாண்டவர்களுக்காக தத் பிரதிகூலனான துரியோதனனையும்-குரூரமான அவனுடைய சேனையையும் நிஸ் சேஷமாக நசிப்பித்துப் பாண்டவர்களுக்கு ராஜ்யத்தைக் கொடுத்து பின்னையும் அவர்களுக்கு ஒன்றும் செய்யாதானாய்த் திரு நாட்டிலே புக்கு அருளின பரம புருஷனே அந்த துஷ் ப்ராபமான திரு நாட்டை நமக்கும் தந்து அருளும் என்று தம் திரு உள்ளத்தை ஆஸ்வசிப்பிக்கிறார்.) 10 | ஏற்றரு வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர்குலத்து ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றிக் கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே.-7-6-10 | ஈன்று இளபிள்ளை ஒன்று ஆய்,Eentru ilapillai ondru aay - அப்போது பிறந்து விலக்ஷ்ணமான பச்சைப் பசுங் குழந்தையாய்க்கொண்டு ஆயர் குலத்து புக்கு,Aayar kulathu pukku - திருவாய்ப்பாடியிலே சென்று சேர்ந்து மாயங்களே இயற்றி,Maayangalae iyarri - பல பல அற்புதச்செயல்களையே செய்து கூற்று இயல் கஞ்சனை கொன்று,Kootru iyam kanjanai kondru - யமன் போன்ற கம்ஸனையும்; முடித்து (பிறகு) ஐவர்க்கு ஆய்,Aivarukku aay - பஞ்ச பாலீண்டவர்களுக்குப் பகூபாதியாயிருந்குஷது கொடு சேனை தடிந்து,Kodu senai tadindhu - கொடிய ப்ரதிபக்ஷ்ஸேனைகளை யழியச் செய்து ஆற்றல் மிக்கான்,Aatral mikkaan - (இவ்வளவு செய்தும்) மிகுந்த நெஞ்சாறல் கொண்டவனாப பெரிய பரம் சோதி புக்க அரி,Periya param sodhi pukka ari - பரமபதஞ் சென்று சேர்ந்த ஹரியான எம்பெருமான் ஏற அருவைகுந்தத்தை,Aaru aruvai kundhaththai - எப்படிப்பட்டவர்களுக்குங் கிடைக்க வரிதான பரமபதத்தை நமக்கு அருளும்,Namakku arulum - நமக்குத் தந்தருள்வன். |