| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3402 | திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (இத்திருவாய்மொழி கற்றார் மதிமுகமடந்தையர் லிரும்பிப் பல்லாண்டு பாடி ஸத்கரிக்கும்படியான பெருமையைப் பெறுவர்களென்று பலன் சொல்லித் தலைக்கட்டுகிற பாசுரமிது.) 11 | புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரைத் தொக்குப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்வர் ஏழையரே.–7-6-11 | அ அரி உரு ஆய புக்கு,A ari uru aaya pukku - அப்படிப்பட்ட சிங்க வடிவையுடையனாய்த் தோன்றி அவுணன் உடல் கீண்டு உகந்த,Avunan udal keenndu ugandha - இரணியாசுரனுடைய உடலே இருபிளவாக்கித் திருவுள்ளமுகந்த சக்கரம் செல்வன்,Chakkaram selvan - திருவாழியையுடைய திருமாலைக் குறித்து குருகூர் சட கோபன் சொன்ன,Kurukoor Sadagopan sonna - ஆழ்வார் அருளிச் செய்த மிக்க ஓர் ஆயிரத்துள்,Mikka or aayiraththul - மிகச் சிறந்த ஆயிரத்தினுள்ளே இவை பத்தும் வல்லாரவரை,Ivai pattum vallaaravari - இத்திருவாய்மொழியை ஓத வல்லவர்களை ஏழையா,Ezhaiya - திருநாட்டிலுள்ள திவ்யாப்ஸரஸ்ஸுக்கள் தொக்கு,Tokku - திரள் திரளாக விருந்து பல்லாண்டு இசைத்து,Pallaandu isaithu - மங்களாசாஸனம் பண்ணி கவரி செய்வர்,Kavari seyvar - சாமரை வீசுதல் முதலிய கிஞ்சி காரங்களைச் செய்பவர்கள். |