திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3404 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3404திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (கண்ணழகு நலிந்தது போராமே மூக்கழகுன் நலியும்படியைச் சொல்லியழுகிறாள்.) 2
ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர்! என்னை நீர் நலிந்து என்? மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனதாவி யுள்ளே மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே.–7-7-2
பதவுரை Show / Hide
அன்னைமீர்,Annai meeer - தாய்மார்களே!
நீர்,Neer - நீங்கள்
என்னை ஆட்டியும் தூற்றியும் நின்று,Ennai aattiyum thootriyum nindru - என்னை யலைத்தும் அலர் தூற்றியும் நின்று
நலிந்து என்,Nalinthu en - நலிகிறவிதனால் என்ன பலனுண்டு?
மாடு உயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ,Maadu uyar karbakathin vallio kolundho - (அக்கண்களின்) அருகே ஓங்கியிருப்பதொரு கற்பகத்தினுடைய கொடியோ கொழுந்தோ!
அறியேன்,Ariyen - அறிகின்றிலேன்;
ஈட்டியவெண்ணெய் உண்டான் திருமூக்கு,Ettiya vennney undaan thirumukku - திரட்டி வைத்திருந்த வெண்ணெயை (க்களவு வழியாலே) அமுது செய்த கண்ணனுடைய திருமூக்கானது
எனது ஆவி உள்ளே,Enadhu aavi ullae - எனது நெஞ்சினுள்ளே
மாட்டிய,Maattiya - ஏற்றிய
வாலியது வல் விளக்கின் சுடர் ஆய் நிற்கும்,Vaaliyadhu val vilakkin sudar aay nirkum - பெருத்து ஸ்திரமான தீப ஜ்வாலே போலே விளங்காநின்றது.