திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3406 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3406திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (திருப்பவளத்தில் அழகு தன்னை நலிகிற படியை சொல்கிறாள்.) 4
இன்னுயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல விற்கொல் மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலை கொல்?மதனன் தன்னுயிர்த் தாதை கண்ணப் பெருமான் புருவம் மவையே என்னுயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே.–7-7-4
பதவுரை Show / Hide
இன் உயிர்க்கு,In uyirkku - இனிமையான உயிரைக் கவர்வதற்காக
ஏழையர் மேல் வளையும்,Ezhaiyar mel valaiyum - பெண்பிறந்தார் மேலேதானே வளைந்து நலிவதான
நீலம் இணைவில் கொல்,Neelam inaivil kol - நீல நிறத்தையுடைய இரண்டு விற்களோ?
மன்னிய சீர் மதனன்,Manniya seer madanan - அழியாவழகடையனான மன்மதனுடைய
கரும்பு சிலை கொல்,Karumbu silai kol - கரும்பமயமான வில்தானோ?
ம நனன் தன் உயிர் தாதை கண்ணன் பெருமான்,Ma nanan than uyir thaathai kannan perumaan - மன்மதனுக்கு அபிமதனான் பிதாவாகிய கண்ணபிரானுடைய
புருவம் அவையே,Puruvam avaiye - அந்தத் திருப்புருவங்களே
என் உயிர் மேலன ஆய்,En uyir melana aay - எனது உயிரையே கணிசித்து
என்றும் நின்றே அடுகின்றன்,Endrum nindrae adukindran - என்றும் ஒருபடிப்பட நின்று நலியாநின்றன.