திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3407 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3407திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (எம்பெருமானுடைய புன்முறுவலின் அழகு வந்து நலிகிற படியைக் கூறுகின்றாள்.) 5
என்று நின்றே திகழும் செய்ய ஈன்சுடர் வெண் மின்னுக்கொல்? அன்றிஎன் ஆவி அடும் அணி முத்தங்கொலோ? அறியேன் குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும் ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்!எனக்கு உய்விடமே.–7-7-5
பதவுரை Show / Hide
என்றும் நின்றே திகழும்,Endrum nindrae thigazhum - எப்போதும் ஒருபடிப்பட நின்று விளங்கும் தாய்
செய்ய சுடர் ஈன்,Seyya sudar een - சிவந்த சுடரை வெளிப்படுத்து மதான
வெண் மின் கொல்,Ven min kol - வெண்ணிறமான மின்னலோ!
அன்றி,Andri - அல்லது
என் ஆவி அடும் அணி முத்தம் கொலோ,En aavi adum ani muththam kolo - என்னுயிரை மாய்க்கின்ற அழகிய முத்துநிரையோ!;
அறியேன்,Ariyen - அறிகின்றிலேன்;
குன்றம் எடுத்த பிரான் முறுவல்,Kunram edutha piran muruval - கோவர்த்தனமலையைக் குடையாக வெடுத்த பெருமானுடைய மந்த ஹாஸமானது
எனது ஆவி அடும்,Enadhu aavi adum - என் ஆத்மாவைத் தபியாநின்றது;
அன்னைமீர்,Annai meeer - தாய்மார்களே!
எனக்கு உய்வு இடம்,Enakku uyvu idam - நான் பிழைக்கு முபாயம்
ஒன்றும் அறிகின்றிலேன்,Ondrum arikindrilen - சிறிதும் அறிகிறேனில்லை.