திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3409 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3409திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (திருநெற்றியினழகுவந்து நலிகிறபடியைச் சொல்லுகிறாள். அவ்வழகை எல்லார்க்கும் காட்டவேணுமென்றும், அதைக்கண்டு தான் படுகிற பாட்டை எல்லாரும் படவேணுமென்றும் இவளுக்கு ஆசையுள்ளது.) 7
காண்மின்கள் அன்னையார்காள்! என்று காட்டும் வகை அறியேன்! நாண் மன்னு வெண் திங்கள் கொல்,நயந்தார்கட்கு நச்சிலை கொல் சேண் மன்னு நால் தடந் தோள் பெருமான் தன் திரு நுதலே? கோண் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோளிழைத்தே.–7-7-7
பதவுரை Show / Hide
அன்னையர் காள காண்மின்கள் என்று,Annaiyar kaala kaanmingal endru - தாய்மார்களே! காணுங்கோள் என்று சொல்லி
காட்டும் வகை அறியேன்,Kaattum vakai arien - (உங்களுக்குக்) காட்டும் வித மறிகின்றிலேன்;
நாள் மன்னு வெண் திங்கள் கொல்,Naal mannu ven thingal kol - பூர்வ பக்ஷ்த்து அஷ்டமீசந்திரனோ!
நயந்தார் கட்கு நஞ்சு இலை கொல்,Nayanthar kadku nanju ilai kol - ஆசைப்பட்டவர்களுக்கு நஞ்சாயிருப்பதொரு இல்லையோ!
சண் மன்னுநால் தட தோள் பெருமான் தன்,Shan mannunaal thada thol perumaan than - உயர்த்தி பொருந்திய நான்கு பருத்த திருத்தோள்களையுடைய எம்பெருமானது
திரு நுதலே,Thiru nuthale - திரு நெற்றியே
கோள் மன்னி,Kol manni - மிடுக்குப் பொருத்தி
கொடியேன் உயிர் கோள் இழைத்து,Kodiyaen uyir kol izhaithu - பாவியான வென்னுடைய பிராணனே முடிக்கையிலே துணிந்து
ஆவி அடும்,Aavi adum - என் ஆத்மாவை நலியாநின்றது.