திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3411 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3411திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (திருக்கழல் வந்து நலிகிற படியைச் சொல்லுகிறாள்.) 9
கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ் சுருளின் உள் கொண்ட நீல நன்னூல் தழைகொல்?அன்று மாயன் குழல் விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரைக் கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்!கழறா நிற்றிரே.–7-7-9
பதவுரை Show / Hide
கொள்கின்ற கோள் இருளை,Kolkindra kol irulai - உலகத்தை யெல்லாம் வியாபிக்கின்ற மிடுக்கையுடைய இருளை
சுகிர்ந்திட்ட கொழு சுருளின்,Sukirnditta kolu surulin - பன்னிப் பன்னிச் சுருட்டப்பெற்ற சிறந்தவொரு சுருளினுடைய
உள் கொண்ட நீலம் நல்நூல் தழை கொல்,Ul konda neelam nalnul thazhai kol - (கையழுக்குப்படாமல்) உள்ளே நூற்கப்பட்ட நீல நிறத்தையுடைய அழகிய நூல்திரளோ!
அன்று,Andru - அதுவென்று, அதுவன்று; திருக்குழல் கற்றை என்றிவ்வளவே சொல்லத்தகுமத்தனை; (அத்திருக்குழலானது)
விள்கின்ற பூ தண்துழாய் விரை நாறவந்து,Vilkindra poo thandhulai virai naaravandhu - அலர்ந்தழகிய குளிர்ந்த திருத்துழாயின் பரிமளம் வீசும்படிவந்து
என்; உயிரை,En uyirai - என் ஆத்மாவை
கள்கின்ற ஆறு,Kalkindra aaru - கொள்ளை கொள்ளும் விதந்தை
அன்னைமீர் அறியீர்,Annaimeer ariyeer - தாய்மார்களே! நீங்கள் அறிகிறீர்களில்லை;
கழறா நிற்றிர்,Kalaraa nittrir - வீணாக் ஏதேனுமொன்றைச் சொல்லிப் பொடிகின்றீர்களே!