| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3413 | திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (இத்திருவாய்மொழியை ஓதுமவர்கள் எம்பெருமானைப் பிரிந்து வருந்தாதே நித்யஸூரிகளோடே கூடி நித்யாதுபவம் பண்ணப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | கட்குஅரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும் கட்குஅரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன உட்குஉடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார் உட்குஉடை வானவரோடு உட னாய் என்றும் மாயாரே.–7-7-11 | கட்கு அரிய,Katku ariya - மனிதா முதலானாருடைய கண்ணுக்க இலக்காகாத பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கு,Piraman sivan indiran endra ivarkku - பிரமன் சிவன் இந்திரன் என்று சொல்லிப் பட்ட இவர்களுடைய கட்கும் அரிய,Katkum ariya - கண்ணுக்கும் காணவர்யனான கண்ணனை,Kannanai - எம்பெருமானைக் குறித்து குருகூர்சட கோபன் சொன்ன,Kurukoor Sadagopan sonna - நம்மாழ்வார் அருளிச்செய்த உட்கு உடை ஆயிரத்துள்,Udkku udai aayirathul - எம்பெருமானை உள்ளபடி பேசும் வல்லமை வாய்ந்த ஆயிரத்தினுள்ளே இவையும் ஒரு பத்தும் வல்லார்,Ivaiyum oru pathum vallaar - இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கள் உட்கு உடை வானவரோடு உடன் ஆய் என்றும்,Udkku udai vaanavarodu utan aai endrum - ஆற்றல்மிக்க நித்ய ஸூரிகளோடு கூடியவர்களாய் மாயார்,Maayaar - ஒரு நாளும் பிரியாதிருக்கப் பெறுவர்கள் |