திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3414 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3414திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (விசித்திரமான காரியங்களையும் காரணங்களையும் எல்லாம் விபூதியாக யுடையனாய் அனுசந்தித்து -இவை என்ன படிகள் என்று விஸ்மிதராய் எம்பெருமானைக் கிடக்கிறார்.) 1
மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய் தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த் தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1
பதவுரை Show / Hide
மாயா,Maayaa - ஆச்சரியமான செய்கைகளையுடையவனே!
வாமனனே,Vaamananey - வாமநாவதாரஞ் செய்தவனே!
மதுசூதா,Madhusootha - மதுகைடபர்களைத் தொலைத்தவனே!
நீ அருளாய்,Nee arulaai - உன்படிகளை நீயே அருளிச் செய்யவேணும்;
தீ ஆய் நீர் ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய்; கால் ஆய்,Thee aai neer aai nilan aai visumbu aai; kaal aai - பஞ்ச பூதங்களுமாய்
தாய் ஆய் தந்தை ஆய்,Thaai aai thandhai aai - மாதா பிதாக்களாய்
மக்கள் ஆய்,Makkal aai - வயிற்றில் பிறந்த பிள்ளைகளாய்
மற்றும் ஆய்,Matrum aai - அல்லாதவையுமாய்
முற்றும் ஆய்,Mutrum aai - சொல்லிச் சொல்லாத எல்லாமுமாய்
நீ ஆய்,Nee aai - அவதாரணமான தன்மை வாய்ந்த நீயாய்
நீ நின்ற ஆறு இவை,Nee ninra aaru ivai - நீ நிற்கிற இந்தச் தன்மைகள்
என்ன நியாயங்கள்,Enna niyayangal - என்னவகைகளோ!