| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3415 | திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (கீழ்ப்பாட்டில் ‘நீ நீயாய் நின்றவாறு’ என்று அஸாதாரணமான ஆகாரத்தை அநுஸந்தித்தாரே; அதனை வாய்விட்டுப் பேசி யநுபவிக்கிறார் ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -சந்த்ர ஸூர்யாதி பதார்த்தங்களை அடைய தனக்கு விபூதியாக யுடையனாய் இருக்கிற படியை அருளிச் செய்கிறார்) 2 | அங்கண் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே!அருளாய் திங்களும் ஞாயிறுமாய்ச் செழும் பல் சுட ராய் இருளாய்ப் பொங்கு பொழி மழையாய்ப் புக ழாய்ப் பழி யாய்ப் பின்னும் நீ வெங்கண் வெங் கூற்றமுமாம் இவை என்ன விசித்திரமே!-7-8-2 | அம் கள் மலர் தண்துழாய் முடி,Am kal malar thandhulai mudi - அழகிய மதுவைக் கொண்ட பூக்களை யுடைத்தான் குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்த மயிர்முடியையுடைய அச்சுதனே,Achuthaney - எம்பெருமானே! அருளாய் நீ,Arulaai nee - அருளிச்செய்யவேணும்; திங்களும் ஞாயிறும ஆய்,Thingalum nyaayirum aai - சந்திரனும் ஸூர்யனுமாயும் செழு பல் சுடர் ஆய்,Sezhu pal sudar aai - லிலக்ஷ்ணமாயும் பலவாயுமுள்ள நக்ஷ்த்திரங்களாயும் இருள் ஆய்,Irul aai - இருளாயும் பொங்கு பொழி மழை ஆய்,Pongu pozhi mazhai aai - பொங்கிப் பொழியும் மழையாயும் புகழ் ஆய் பழி ஆய்,Pugazh aai pazhi aai - கீர்த்தியாயும் அபகீர்த்தியாயும் பின்னும்,Pinnum - இன்னமும் வெம் கண் வெம் கூற்றமும் ஆய் இவை,Vem kan vem kutramum aai ivai - க்ரூரமான கண்களையும் க்ரூரஸ்வபாவத்தையு முடைய ம்ருத்யுவாயும் நிற்கிற இந்த ப்ரகாரங்கள் என்ன விசித்திரம்,Enna visithiram - என்ன வேடிக்கை களோ! |