திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3416 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3416திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (கீழ்ப்பாட்டில் வெங்கண் வெங்கூற்றமுமாய் என்றாரே; மண்ணின் பாரம் நீக்குதற்கு வடமதுரையிற் பிறந்த பிறவியிலேயே, மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழியப் பார்த்தன் சிலைவளையத் திண்தேர்மேல் முன்னின்று அதனை நடத்தின விசித்திரம் நினைவுக்குவர. சித்திரத் தேர்வலவா திருச்சக்கரத்தாய்! என்று விளிக்கிறார்.) 3
சித்திரத் தேர் வலவா!திருச் சக்கரத் தாய்!அருளாய் எத்தனையோர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும் ஒத்த ஒண் பல் பொருள்கள் உலப்பில்லனவாய் வியவாய் வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே!–7-8-3
பதவுரை Show / Hide
சித்திரம்,Siththiram - விசித்திரமாகத் தேரை நடத்த வல்லவனே!
தேர் வலவா திரு சக்கரத் தாய்,Ther valavaa thiru sakkarath thaai - திருவாழிப்படையை யடையவனே!
அருளாய்,Arulaai - நீயருளிச் செய்ய வேணும்;
எத்தனை ஓர் உகமும் அவை ஆய்,Eththanai or ugamum avai aai - க்ருதம் முதலான யுகங்களுக் கெல்லாம் நிர்வாஹனாகய்
அவற்றுள் இயலும்,Avatrul iyalum - அந்த காலங்களுக்குள்ளே நடப்பதாய்
ஒத்த விய ஒண்பல் உலப்பு இல்லன பொருள் ஆய்,Oththa viya onpal ulappu illana porul aai - ஒருபடியாலே ஒத்தும் மற்றொருபடியாலே வேறுபட்டுமிருக்கிற அழகிய பல எண்ணிறந்த பதார்த்தங்களுமாய்
வித்தகத்தால் நீ நிற்றி,Viththagathaal nee nittri - ஆச்சரியப்படத்தக்க தன்மையோடே நீ நிற்கின்றாய்;
இவை என்ன விடமங்கள்,Ivai enna vidamanghal - இவை யென்ன சேராச்சேர்த்திகளோ!