Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3417 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3417திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (முதன் முதலிலே தம்மை விசேஷ கடாக்ஷம் பண்ணி இவ்வளவு அதிகாரத்திலே கொண்டு நிறுத்தினவை திருக்கண்களேயன்றோ; “பெருங்கேழலார் தம் பெருங்கண் மலர்ப்ண்டரீகம் நம்மே லொருங்கே பிறழைவைத்தார் இவ்வகாலம்” (திருவிருத்தம்) என்று தாமே யருளிச்செய்து வைத்தாரே. அப்படிப்பட்ட திருக்கண்ணழகிலே யீடுபட்டுப் பேசுகிறார்.) 4
கள்ளவிழ் தாமரைக் கண் கண்ணனே!எனக்கு ஒன்று அருளாய்
உள்ளதும் இல்லதுமாய் உலப்பில்லனவாய் வியவாய்
வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவி
உள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!–7-8-4
கள் அவிழ் தாமரை கண் கண்ணனே,Kal avizh thaamarai kan kannaney - மதுவொழுகுகின்ற கண்களையுடைய கண்ணபிரானே!
எனக்கு ஒன்று அருளாய்,Enakku ondru arulaai - அடியேனுக்கு இவ்விஷயமொன்று அருளிச்செய்ய வேணும்;
உள்ளதும் இல்லதும் ஆய் உலப்பு இல்லன ஆய் விய ஆய்,Ulladhum illadhum aai ulappu illana aai viya aai - நித்யமாகையாலே உள்ளதுமாய் வேறு அவஸ்தையையடைகையாலே இல்லாததுமான எண்ணிறந்தவையுமான வேறு வேறு வகைப்பட்ட சேதநாசேதநப் பொருள்களுக்கு நிர்வாஹகனாய்
வெள்ளம் தட கடலுள்,Vellam tada kadalul - விசாலமான திருப்பாற்கடல் வெள்ளத்திலே
விடம் நாகணை மேல் மருவி,Vidam naaganai mel maruvi - (விரோதிகள்) அணுக வொண்ணுமைக்காக, விஷத்தை உமிழ்கிற திருவனந்தாழ்வானாகிறபடுக்கையிலே பொருந்தி
உள்ளம்,Ullam - திருவுள்ளத்திலே
பல் யோரு செய்தி,Pal yoru seidhi - பலவகைப்பட்ட ரக்ஷிணோபாயங்களைச் சிந்தியாநின்றாய்;
இவை என்ன உபாயங்களே,Ivai enna upayanghale - இவையென்ன விரகுகள்!