திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3418 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3418திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (இப்பதிகத்தின் ப்ரமேயத்திற்குத் தலைமையான பாசுரமிது. என்னை ஆதியிலே விசேஷ கடாக்ஷம் பண்ணி வைத்துப் பின்னையும் எனக்குப் பொருந்தாதபடியான ஸம்ஸாரத்திலே வைத்து நடத்திக்கொண்டு போருகிற இவ்வாச்சரிய மிகுந்த படியை எனக்கருளிச் செய்யவேணுமென்கிறார்.) 5
பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!அருளாய் காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே.–7-8-5
பதவுரை Show / Hide
வாசம் மலர் தண்துழாய் முடி மாயவனே,Vaasam malar thandhulai mudi maayavaney - நறுமணம் மிக்க பூவையுடைய செவ்வித்திருத்துழாயை யணிந்த மயிர் முடியையுடைய ஆச்சரியனே!,
நீ,Nee - இப்படிப்பட்ட நீ,
என்னை பாசங்கள் நீக்கி,Ennai paasangal neekki - எனக்குத் தகாத விஷயஸங்கங்களேக் கழித்து
உனக்கே அற கொண்டிட்டு,Unakke arak kondittu - உனக்கே அற்றுத் தீரும்படி அங்கீகரித்து வைத்து
காயமும் சீவனும்,Kaayamum seevanum - பந்தமான சரீரமும் பத்த ஜீவனும்
கழிவு பிறப்பு ஆய்,Kazhivu pirappu aai - இவற்றுக்கு வரக்கூடிய விநாசமும் உத்பத்தியும் நீயிட்ட வழக்காம்படியாயிருக்க,
பின்னும்,Pinnum - பின்னையும்
நீ மாயங்கள் செய்து வைத்தி,Nee maayanghal seydhu vaiththi - அவித்யா கர்மவாஸநாருசிகளாகிற வஞ்சனங்களைப பண்ணிவையா நின்றாய்;
இவை என்ன மயக்குக்கள்,Ivai enna mayakkukal - இவை என்ன வ்யாமோ ஹகங்களாயிருக்கின்றன!
அருளாய்,Arulaai - அருளிச்செய்ய வேணும்.