Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3419 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3419திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் ப்ராமக சேஷ்டிதங்களை யுடைய வாமனனான நீ விஸ்ம்ருதியாதி விசித்ரனாய்க் கொண்டு பண்ணுகிற கிலேசங்கள் என்னாய் இருக்கின்றன -என்கிறார்.) 6
மயக்கா! வாமனனே! மதியாம் வண்ணம் ஒன்றருளாய்
அயர்ப்பாய்த் தேற்றமுமாய் அழலாய்க் குளிராய் வியவாய்
வியப்பாய் வென்றிகளாய் வினையாய்ப் பயனாய்ப் பின்னுநீ
துயக்கா நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே.–7-8-6
மயக்கா,Mayakkaa - எப்படிப்பட்டவாகளையும் மதி கெடும்படிபண்ணுமவனே!
வாமனனே,Vaamananey - (அந்த சக்தியை) வாமநாவதாரத்தில் காட்டினவனே!
மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய்,Madhi aam vannam ondru arulaai - எனக்குக் கலக்கந் தீர்ந்து அறிவுண்டாம்படி அருளிச் செய்ய வேணும்;
துயர்ப்பு தேற்றமும் ஆய்,Thuyarppu thetramum aai - மறப்பும் தெளிவும் நீயிட்ட வழக்காய்
அழல் குளிர் ஆய்,Azhal kulir aai - தாபமும் குளிர்ச்சியும் நீயிட்டவழக்காய்
வியவு வியப்பு ஆய்,Viyavu viyappu aai - விஸ்மயநீயமும் விஸ்மயமும் நீயிட்ட வழக்காய்
வென்றிகள் ஆய்,Vendrigal aai - (உலகில் விஜய ஸித்திகளும் நீயிட்ட வழக்காய்
வினை பயன் ஆய்,Vinai payan aai - புண்ய பாபரூப கருமங்களும் அவற்றின் பலன்களும் நீயிட்ட வழக்காய்
பின்னும்,Pinnum - அதுக்குமேலே
துயக்கு நீ ஆய,Thuyakku nee aai - இவற்றிலே சேதநர்கலங்குகிற கலக்கமும் நீயிட்டவழக்காய்
நீ நின்ற ஆறு இவை,Nee ninra aaru ivai - நீ நிறகிற இந்த ப்ரகாரங்கள்
என்ன துயரங்கள்,Enna thuyaranghal - என்ன கஷ்டங்களாயிருக்கின்றன!