திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3420 | திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (இங்கு துயரங்கள் செய்யுங்கண்ணா! என்று எம்பெருமானை விளிக்கின்றார்) 7 | துயரங்கள் செய்யும் கண்ணா !சுடர் நீள் முடி யாய்!அருளாய்
துயரஞ் செய் மானங்களாய் மதனாகி உகவைகளாய்த்
துயரஞ் செய் காமங்களாய்த் துலையாய் நிலையாய் நடையாய்த்
துயரங்கள் செய்து வைத்தி;இவை என்ன சுண் டாயங்களே.–7-8-7 | பதவுரை Show / Hideதுயரங்கள் செய்யும் கண்ணா!,Thuyaranghal seyyum kanna! - துக்கங்களையுண்டாக்குகிற கண்ணனே! சுடர் நீள் முடியாய்,Sudar neel mudiyai - ஒளிமிக்கு ஓங்கின திருவபிஷேகத்தை யுடையவனே! துயரம் செய்,Thuyaram sei - துக்கத்தை விளைக்கிற மானங்கள் ஆய்,Maanangal aai - பலவகைப்பட்ட துரபிமானங்களாய் மதன் ஆகி,Madan aagi - செருக்குமாய் உகவைகள் ஆய்,Ugavaigal aai - ப்ரீதிகளுமாய் துயரம் செய் காமங்கள் ஆய்,Thuyaram sei kaamangal aai - துக்கங்களை விளைக்கிற காமங்களாய் துலை ஆய் நிலை ஆய் நடை ஆய்,Thulai aai nilai aai nadai aai - பரிமாணங்களாய் ஸ்தாவர ஜங்கமங்களாய் துயரங்கள் செய்து வைத்தி,Thuyaranghal seydhu vaiththi - (இப்படி சேதநர்களுக்கு) துக்கங்களைப் பண்ணிவைக்கிறாய்; இவை என்ன சுண்டாயங்கள்,Ivai enna sundhaayangal - இவை என்ன விளையாட்டுக்களோ! அருளாய்,Arulaai - அருளிச்செய்யவேணும். |