| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3421 | திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (இப்பாட்டின் முதலடியில் பாடபேதம் காண்கிறது; “என்ன சுண்டாயங்களால் எங்ஙனே நின்றிட்டாயென் ” என்பது சில ஆசாரிகளின் பாடம்; “என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாயென்னையாளுங் ” என்பது சில ஆசாரியர்களின் பாடம். அடுத்த பாசுரத்தின் முதலடியிலும் இது மாறிவரும்.)(என்னையாளுங்கண்ணா! என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய்-என்னையடிமை கொள்ளுகிற கண்ணபிரானே! என்ன லீலைகளையுடையையாய் நிற்கிறாய் என்று வியக்கிறார்.) 8 | என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளுங்கண்ணா! இன்னதோர் தன்மையை என்று உன்னை யாவர்க்குந் தேற்றரியை முன்னிய மூவுலகும் மவையாய் அவற்றைப் படைத்தும் பின்னும் உள்ளாய்!புறத்தாய்!இவை என்ன இயற்கைகளே–7-8-8 | ன்னை ஆளும் கண்ணா,,Nnai aalum kanna, - என்னை அடிமை கொள்ளுகிற கண்ணனே! என்ன சுண்டாயங்களால்,Enna sundhaayangalal - என்ன லீலைகளையுடையையாய் நிற்கிறாய்! நின்றிட்டாய் இன்னது ஓர் தன்மையை என்று,Ninriṭṭaai innadhu or thanmaiyai endru - இன்னபடிப்ப்ட்டஸ்வ பாவத்தையுடையையாயிரா நின்றாயென்றுஸ உன்னை யாவர்க்கும் தேற்ற அரியை,Unnai yaavarkkum thetra ariyai - ஓருவர்க்கும் நிர்ணயித்துக்காட்ட முடியாதவனாயிரா நின்றாய்; முன்னைய மூவுலகும் அவை ஆய்,Munnaiya moovulagamum avai aai - நித்தியமான மூவுலகங்களுக்கும் நிர்வாஹகனாய் அவற்றை படைத்து,Avatrai padaiththu - அவற்றை ஸ்ருஷ்டித்து பின்னும்,Pinnum - அதுக்குமேலே உள் ஆய் புறத்தாய்,Ul aai puraththaa - உளளிலும் வெளியிலும் வியாபித்திருக்கிறவனே! இவை என்ன இயற்கைகள்,Ivai enna iyarkaihal - இவை என்ன ஸ்பாவங்களாயிருக்கின்றன!, |