திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3422 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3422திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ஞான இந்திரியங்களும் கர்ம இந்திரியங்களும் சப்தாதி விஷயங்களும் அவனுக்கு விபூதியாய் இருக்கும் இருப்பை அனுசந்திக்கிறார்.) 9
என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா துன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும் உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே உன்னை உணர உறில் உலப்பில்லை நுணுக்கங்களே.–7-8-9
பதவுரை Show / Hide
என் கண்ணா,En kannaa - எனது கண்ண பிரானே!
என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய்,Enna iyarkaihalal enggane ninriṭṭaai - என்ன் ஸ்வபாவங்களோடே என்ன ப்ரகாரத்திலே நின்றாய்;
துன்னு கரம் சரணம் முதல் ஆக,Thunnu karam saranam mudhal aaka - நெருங்கிய கரசரணாதிகளான
எல்லா உறுப்பும்,Ellaa uruppum - எல்லாக்கரணங்களும்
உன்னு,Unnu - விரும்பத்தக்க
சுவை ஒளி ஊறு நாற்றம் முற்றும் நீயே,Suvai oli ooru naatram muttrum neeye - ரஸம் ரூபம் ஸ்பர்சம் சப்தம் கந்தம் இவையாகிற ஸகல விஷயங்களும் நீயே;
உன்னை உணர உறில்,Unnai unara uril - இப்படிப்பட்ட வுன்னை நிரூபிக்க நினைக்கில்
நுணுக்கங்கள் உலப்பு இல்லை,Nunukkangal ulappu illai - உன்னுடைய நுட்பத்திற்கு முடிவில்லை.