திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3423 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3423திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -வேதைக சமைதி கம்யனாய்-காரணமாய் -அதி ஸூஷ்மமாய் இருந்துள்ள சேதன அசேதனங்களை விபூதியாக உடையவனுடைய இருப்பை அனுசந்திக்கிறார்.) 10
இல்லை நுணுக்கங்களே இதனி்ற் பிறி தென்னும் வண்ணம் தொல்லை நன்னூலிற் சொன்ன உருவும் அருவும் நீயே அல்லித் துழாய் அலங்கல் அணிமார்ப!என் அச்சுதனே! வல்லதோர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்காம் வண்ணமே –7-8-10
பதவுரை Show / Hide
இதனில் பிறிது நுணுக்கங்கள் இல்லை என்னும் வண்ணம்,Idanil piridhu nunukkangal illai ennum vannam - இதிற்காட்டில் வேறு நுட்பமில்லை யென்னும்படி
தொல்லை நல்நூலில் சொன்ன,Tollai nalnulil sonna - அநாதியான வேதசாஸ்த்ரத்திலே சொல்லப்பட்ட
உருவும் அருவும் நீயே,Uruvum aruvum neeye - அசித்தும் சித்தும் நீயே;
அல்லி துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே,Alli thulai alangkal ani maarba en achuthaney - பூந்தாரையுடைத்தான திருத்துழாய் மாலை யணிந்த திருமார்பையுடைய என் அச்சுதனே!
வல்லது ஒர் வண்ணம் சொன்னால்,Valladhu or vannam sonnaal - கூடுமானவரையில் (யார் எது) சொன்னாலும்
உனக்கு அதுவே வண்ணம் ஆம்,Unakku adhuve vannam aam - சொன்னவவ்வளவே உனக்கு வடிவாம்