| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3424 | திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நிகமத்தில் ஒருவராலும் ஒரு வகையும் அறிய ஒண்ணாத சர்வேஸ்வரனை உள்ளபடியே அறிந்து அங்குத்தைக்கு சத்ருசமாக ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழியிலும் இத் திருவாய் மொழியை யதா சக்தி சொல்லுமவர்கள் என்றைக்கும் க்ருதக்ருத்யர் என்கிறார். ஆம் வண்ண ஒண் தமிழ் ஆவது –நல்ல சந்தஸ் ஸை யுடைத்தான அழகிய தமிழ் என்றுமாம்.) 11 | ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை ஆம் வண்ண த்தால் குரு கூர்ச் சடகோபன் அறிந்து உரை த்த ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும் ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே.–7-8-11 | ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று,Aam vannam innadhu ondru endru - இன்னபடிப் பட்டிருப்பதொரு ஸ்வபாவ மென்று அறிவது அரிய அரியை,Arivathu ariya ariyai - (ஒருவராலும்) அறிய முடியாத ஸர்வேச்வரனை குருகூர் சட கோபன்,Kurukoor Sadagopan - நம்மாழ்வார் ஆம் வண்ணத்தால் அறிந்து உரைத்த,Aam vannathaal arinthu uraittha - உள்ளபடியறிந்து அருளிச் செய்த ஆம் வண்ணம் ஒண்தமிழ்கள் இவை ஆயிரத்துள்,Aam vannam ondhthamizhal ivai aayirathul - தகுதியான சந்தஸ்ஸையுடைய அழகிய தமிழினாலான இவ்வாயிரத்துள் பத்தும்,Pathum - இப்பதிகத்தை ஆம் வண்ணத்தால் உரைப்பார்,Aam vannathaal uraippaar - இயன்றவளவு சொல்ல வல்லவர்கள்;. என்றைக்கும்,Endraikkum - ஆத்மாவுள்ளவரைக்கும் தமக்கு அமைந்தார்,Thamakku amaindhaar - க்ருதக்ருத்யர்கள். |