திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3429 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3429திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (தன்னைக் கவிபாடுகைக்குத் தக்க ஆற்றலும் ஆசையுமில்லாதிருந்த வென்னைக்கொண்டு, உலகமெல்லாங் கொண்டாடும்படியான பாசுரங்களைப் பாடுவித்துக் கொண்டானே! என்ன ஸர்வேச்வரனோ வென்கிறார்.) 5
சீர் கண்டு கொண்டு திருந்து நல் இன் கவி நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில் ஏர்வுஇலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப் பார் பரவு இன் கவி பாடும் பரமரே.–7-9-5
பதவுரை Show / Hide
சீர் கண்டு கொண்டு,Seer kandu kondu - பகவத்குணங்களை அவகாஹித்து
திருந்து நல்இன் கவி,Thirundhu nalin kavi - திருத்தமுற்று விலக்ஷ்ணமாய் மதுரமான பாசுரங்களை
யான் நேர்படசொல்லும் நீர்மை இலாமையில்,Yaan naerpadachollum neermai ilaamaiyil - நேர்த்தியாகப் பாடுகைக்குரிய சக்தி எனக்கில்லாமையாலே
ஏர்வு இலா என்னை தன்னாக்கி,Aervu ilaa ennai thannaakki - தகுதியற்ற வென்னைத் தன்னோடொக்கக் கடாக்ஷித்து
என்னால்,Ennaal - அப்படி கடாக்ஷிக்கப் பெற்ற அடியேனைக் கொண்டு
தன்னை,Thannai - தன் விஷயமாக
பார் பரவு இன் கவிபாடும் பமர்,Paar paravu in kavi paadum pamara - நிலவுலகம் முழுதும் கொண்டாடும்படி யான இனிய பாசுரங்களைப்பாடும்; பரமபுருஷராயிரா நின்றார்!