திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3432 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3432திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (என்னைக்கொண்டு திருவாய்மொழி பாடுவித்துக்கொண்ட இந்த மஹா குணத்திற்கு உபயவிபூதியிலுமுள்ளாருடைய சக்தியையும் வாக்கு முதலிய உபகரணங்களையும் நானொருவனே பெற்று அநுபவித்தாலும் த்ருப்திபெறமாட்டேனென்கிறார்.) 8
ஆர்வனோ ஆழி அங் கை எம்பிரான் புகழ் பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும் ஏர்விலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைச் சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே ? –7-9-8
பதவுரை Show / Hide
ஏர்வு இலா என்னை தன் ஆக்கி என்னுல்,Aervu ilaa ennai than aakki ennull - தகுதியற்ற வென்னைத் தன்னேடொக்கவருள் செய்து
தன்னை சீர்பெற இன் கவி சொன்ன திறத்துக்கு,Thannai seerperra in kavi sonna thiraththukku - என்னையிட்டுத் தன் விஷயத்தில் சிறப்புண்டாம்படி இனிய பாசுரங்களைச் சொன்னபடிக்கு
ஆழி அம் கை எம்பிரான் புகழ்,Aazhi am kai emperaan pugazh - சக்ரபாணியான அந்த எம்பெருமானுடைய திருப்புகழை
பார்விண் நீர் முற்றும் கலந்து பருகினும் ஆர்வனே,Paarvin neer muttrum kalandhu paruginum aarvaney - மண்ணிலுள்ளாரும் கூறிராப்தியிலுள்ளாரும் ஒன்று சேர்ந்து புகழ நேர்ந்தாலும் நான் திருப்தியடைவேனே?