திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3433 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3433திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (கீழ்ப்பாட்டிற் சொன்னதுதன்னையே இன்னமும் சிறிது சித்திரித்துப் பேசுகிறார்.) 9
திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர் இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ? மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?–7-9-9
பதவுரை Show / Hide
மறப்பு இலா என்னை,Marappu ilaa ennai - மறப்புக்கு விஷயமில்லாதபடி ஸ்மரணமேயில்லாதிருந்த வென்னை
தன் ஆக்கி,Than aakki - தன்னோடொக்க வீஷயீகரித்து
என்னால் தன்னை உறபல இன்க சொன்ன உதவிக்கு,Ennala thannai urpala inna sonna uthavikku - என்னைக்கொண்டு தனக்குப் பொருத்தமாகப் பல இனிய பாசுரங்களைப் பாடுவித்த மஹோபகாரத்திற்கு,
திறத்துக்கு ஏய் துப்பரவு ஆம் திருமாலின் சீர்,Thiraththukku aai thupparavu aam thirumaalin seer - எந்த விஷயத்திலும் பொருத்தமான ஸாமர்த்தியத்தையுடைய திருமாலின் குணங்களை
இறப்பு எதிர் காலம்,Irappu edhir kaalham - இறந்த காலத்தையும் எதிர் காலத்தையும் கூட்டிக்கொண்டு
பருகிலும்,Paruginum - அநுபவித்தாலும்
ஆர்வனோ,Aarvano - பர்யாப்தி பெறுவேனோ?