திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3436 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3436திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (எம்பெருமான் பிராட்டியோடு கூடு ஆனந்தமயனாக எழுந்தருளியிருக்குமிடமான திருவாறன்விளையிலே அநுபவித்து அடிமை செய்யுங்காலமும் ஆகுமோ வெம்கிறார்.) 1
இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1
பதவுரை Show / Hide
எழில் மலர் மாதரும் தானும்,Ezhil malar maadharum thaanum - அழகிய தாமரைமலரிற் பிறந்த பெரிய பிராட்டியாரும் தானும்
இன்பம் பயக்க,Inbam payakka - பரஸ்பரம் ஆனந்தம் மேலிடும் படியாக
இனிது உடன் வீற்றிருந்து,Inidhu udan veetrirundhu - இனிமையோடு கூட வெழுந்தருளியிருந்து
இ ஏழ் உலகை,I ezh ulagai - இவ்வுலகங்களையெல்லாம்
இன்பம் பயக்க ஆள்கின்ற,Inbam payakka aalkindra - இனிமையுற அடிமை கொண்டருளா நிற்கிற
எங்கள் பிரான்,Engal piraan - எம்பெருமான்
அன்புற்று அமர்ந்து உறைகின்ற,Anputru amarnthu uraignra - மிகவும் திருவுள்ள முகந்து வர்த்திக்கிற
அணி பொழில் சூழ்திருவாறன் விளை,Ani pozhil soozhthiruvaaran vilai - அழகிய சோலைகள் சூழ்ந்த திருவாறன் விளைத் திருப்பதியை
அன்புற்று அமர்ந்து,Anputru amarnthu - அன்போடு பொருந்தி
வலஞ் செய்து,Valanj seydhu - ப்ரதக்ஷிணம் பண்ணி
கை தொழும் நாள்களும் ஆகும் கொல்,Kai thozhum naalgalum aakum kol - கை தொழும்படியான நாட்களும் ஸமீபிக்கு மோ?