திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3438 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3438திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருவாறன் விளையில் எம்பெருமான் திருவடி மேலே நீ ஏறி அருளி இங்கே எழுந்து அருளக் கண்டாலும் அதனைத் தவிர்ந்து நாள் தோறும் திருவாறன் விளையை தொழக் கூட வற்றே என்கிறார்.) 3
கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை ஆடு பறவை மிசைக்கண்டு கைதொழுது அன்றி யவன் உறையும் பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வி யைந்து ஆறங்கம் பன்னினர் வாழ் நீடு பொழில்திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே?–7-10-3
பதவுரை Show / Hide
வைகலும் கூடும் கொல்,Vaikalum koodum kol - (நமது மநொரதம்) எப்போதும் நிறைவேறப்பெறுமோ?
கோவிந்தனை,Govindhanai - ஆயர்தலைவனும்
மதுசூதனை,Madhusoothanai - மதுகைடபஹந்தாவும்
ஆடு பறவை மிசை கண்டு,Aadu paravai misai kandu - வெற்றியையுடைய கருடன் மேலே கண்டு
கைதொழுது,Kai thozhuthu - அஞ்ஜலிபண்ணி அவ்வளவேயல்லாமல்
அவன் உறையும்,Avan uraiyum - அப்பெருமான் நித்யவாஸம் பண்ணுமிடமாய்,
பாடும் பெரு புகழ் நால் மறை ஜந்து வேள்வி ஆறு அங்கம் பன்னினர்வாழ்,Paadum peru pugazh naal mazhai jandhu vaelvi aaru angam panninarvaaz - உரக்கப்பாடப்படுகிற மிக்க புகழையுடைய நான்கு வேதங்களென்ன, பஞ்சமஹாயஜ்ஞங்களென்ன, சீவீக்ஷி முதலான ஆறங்கங்களென்ன இவற்றிலே மிக்க பரிசய முள்ளவர்கள் வாழுமிடமாய்
நீடு பொழில்,Needu pozhil - பெரிய சோலைகளையுடையதான
திருவாறன் விளை,Thiruvaaran vilai - திருவாறன் விளைப்பதியை
நிச்சலும் தொழ வாய்க்கும் கொல்,Nichchalam thozha vaaykkum kol - எப்போதும் தொழுது கொண்டேயிருக்கும் படியான பாக்கியம் வாய்க்குமோ?