| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3439 | திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (திருவாறன்விளையிலே சென்று அநுபவிக்க ப்ராப்தியில்லையாகிலுமாகுக; அங்கு நின்றருளின் எம்பெருமான் திருவடிகளை இங்கேயிருந்தாகிலும நிரந்தரமாகச் சிந்தனை செய்யும் பாக்கியம் வாய்க்குமோ வென்கிறார்.) 4 | வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற வாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திரு வாறன்விளை வாய்க்கும் பெரும்புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே?–7-10-4 | வாய்க்கும் கரும்பும் பெரு செந்நெலும் வயல் சூழ்,Vaaykkum karumpum peru chennelum vayal soozh - செழித்த கரும்புகளும் ஓங்கிய செந்நெற்களுமான கழனிகள் சூழப்பெற்ற திருவாறன் விளை,Thiruvaaran vilai - திருவாறன் விளைப்பதியிலே, வாய்க்கும் பெரு புகழ்,Vaaykkum peru pugazh - வாய்ந்த மிக்க கீர்த்தியையுடையவனும் மூ உலகு ஈசன்,Moo ulagu eesan - மூவுலங்களுக்கும் ஸ்வாமியும் வட மதுரை பிறந்த,Vada madurai pirandha - வடமதுரையில் அவதரித்தவனும் வாய்க்கும் மணி நிறம்,Vaaykkum mani niram - அநுபவிக்க வாய்த்த நீலரத்னம் போன்ற நிறத்தையுடையனுமான கண்ண பிரான் தன்,Kanna piraan than - ஸ்ரீ க்ருஷ்ணபகவானுடைய மலர் அடி போதுகள்,Malar adi pothugal - விதஸிதமான திருவடித்தாமரைகளை எப்பொழுதும்,Eppozhudhum - இடை வீடின்றி ஈங்கு மனத்து நினைக்க பெற,Eengu manaththu ninaikka perra - இங்கேயிருந்து மனத்திலே நினைக்கும்படியான பேறு பெறுதற்கு நிச்சலும் வாய்க்கும் கொல்,Nichchalam vaaykkum kol - எப்போதும் பாக்கியம் வாய்க்குமோ? |