| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3443 | திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (திருவாறன்விளையிலே புகவே நம்முடைய ஸகல துக்கங்களும் தொலையுமென்கிறார்.) 8 | அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய் நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான் சென்று அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன்விளை ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ? தீவினை உள்ளத்தின் சார்வல்லவே.–7-10-8 | அகல் இரு பொங்கையின் வாய் நின்று,Akal iru pongaiyin vaai ninru - மிகப் பெரிய பொய்கையிடத்திலே (முதலையின் வாயிலாகப்பட்டது) நின்று நின் சரண் அன்றி மற்று ஒன்று இலன் என்று தன்; நீள் கழல் எத்திய ஆனையின்,Nin saran andri matru ondrum illan endru than; neel kazhal edhiya aanaiyin - ‘உன் திருவடிகளை யொழிய மற்றொரு புகலுடையே னல்லேன்’ என்று தன்னுடைய திருவடிகளைத் துதித்த கஜேந்திராழ்வானுடைய நெஞ்சு இடர் தீர்த்த பிரான் சென்று,Nenju idar theertha piraan senru - செழும் நெஞ்சிலிருந்த இடரைப் போக்கின பெருமான் சென்று அங்கு இனிது உறைகின்ற பொழில் சூழ் திருவாறன் விளை (யை) ஒன்றி ஸலம் செய்ய ஒன்றுமோ,Onri salam seyyum ondrumo - கிட்டி வலஞ் செய்யக் கூடுமோ? தீ வினை உள்ளத்தின் சார்வு அல்லவே,Thee vinai ullaththin saarvu allavae - (அப்படி கூடுமாலீகில்) பாவங்கள் நெஞ்சில் பொருத்த முடையன வல்லவாம். |