| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3445 | திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருவாறன் விளையை பிராப்யம் என்று இருக்க -அவன் திரு நாட்டைத் தரிலோ என்ன அவன் சர்வஞ்ஞான் அல்லனோ அறியானோ என்கிறார்.) 10 | சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை தேவபிரான் அறியும் சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும் சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.–7-10-10 | சிந்தையினால் சொல்லினால் செய்கையால்,Sindhaiynaal sollinaal seykaiyaal - மனோவாக்காயங்களாலே நிலத்தேவர் குழு வணங்கும்,Nilaththaevar kuzhu vanangum - பாகவத கோஷ்டி வணங்கப்பெற்ற சிந்தை மகிழ்திருவாறன் விளை உறை,Sindhai makizthiruvaaran vilai urai - மகோஹரமான திருவாறன் விளையிலே வாழ்கிற தீர்த்தனுக்கு அற்றபின்,Theerththanukku attrapin - பரமபவித்தரனான பெருமானுக்கு அற்றுத்தீர்ந்த பின் சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அலலா தன்மை,Sindhai matru ondrin thiraththathu allaa thanmai - எனது மனம் வேறெனறை உத்தேச்யமாக நினைத்திராத படியை தேவபிரான் அறியும்,Deva piraan ariyum - ஸர்வஜ்ஞனான எம்பெருமான தானே அறியக்கடவன்; சிந்தையினால் செய்வ,Sindhaiynaal seiva - நெஞ்சால் செய்யப்படுமவற்றில் தான் அறியா தன மாயங்கள் ஒன்றும் இல்லை,Thaan ariya thana maayanghal ondrum illai - அவன் தானறியாத வஞ்சனாங்களொன்றுமில்லையே. |