| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3446 | திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (இத்திருவாய்மொழியை ஒதுமவர்கள் நித்யஸூரிகள் போரவும் கௌரவிப்பர்களென்று அதனையே பலனாகக் கூறித் தலைக் கட்டுகிறார்.) 11 | தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல் தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–7-10-11 | தீர்த்தனுக்கு அற்றபின்,Theerththanukku attrapin - பரமபவித்திரனான எம்பெருமானுக்கு அநந்யார் ஹப்பட்டபின்பு மற்று ஒர் சரண இல்லை என்று எண்ணி,Matru or saran illai endru enni - வேறொரு உபாயமில்லை யென்று அறுதியிட்டு தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனன் ஆகி,TheerththanukkE theertha manadhthanan aagi - அப்பெருமானுக்கே அறுதியாக்கப்பட்ட நெஞ்சையுடையவராய்க் கொண்டு செழு குருகூர் சடகோபன் சொன்ன;,Sezhu kurukoor Sadagopan sonna; - செழு குருகூர் சடகோபன் சொன்ன; தீர்த்தகங்கள் ஆயிரத்துள்,Theerththakangal aayiraththul - ஆயிரம் பாட்டும் ஆயிரம் தீர்த்தங்களென்னும் படியாக வுள்ளத்திலே இவை பத்தும் வல்லார்களை,Ivai pathum vallaargalai - இப்பதிகத்தை ஓத வல்லவர்களைப் பற்றி தேவர்,Devar - நித்யஸூரிகள் வைகல்,Vaikal - எப்போதும் தம் தேவியர்க்கு,Tham deviyarkku - தங்கள் மஹிஷிகளிடத்திலே தீர்த்தங்களே,Theerththangalai - ‘இவர்கள் பரமபவித்தரங்களே’ என்று ஸபஹூமானமாகச் சொல்லுவர்கள். |