| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3449 | திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (அடியவர்க்கு எளியவனென்று பேர்பெற்றிருக்கிற நீ இன்றுவந்து உதவாதொழியில் நீ ஆச்ரித ரக்ஷகனென்னுமிடத்தை உன்னடியார்கள் எப்படி நம்பமுடியுமென்கிறார். இப்பாசுரத்திற்கு உயிரானது.) 3 | எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! அசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்களிறே ! அடியனேன் பெரிய வம்மானே ! கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை யுகிராண்ட எம் கடலே ! அடுத்த தோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?–8-1-3 | எடுத்த பேராளன்,Edutha peralan - நிதி யெடுத்த மஹாநுபாவனென்று கொண்டாடப்படுகிற நந்தகோபன் தன்,Nandakopan than - நந்தகோபனுடைய இன் உயிர் சிறுவனே,In uyir siruvane - இனிமையான உயிர்போன்ற திருக்குமாரனே! அசோதைக்கு அடுத்த பேர் இன்பம்,Asothaikku adutha per inbam - (தேவதிப்பிராட்டி வயிறெறிந்து கிடக்க) யசோதைப்பிராட்டியிடம் வந்து சேர்ந்த அளவிறந்த ஆனந்தவடிவனாகி. குலம் இளங் களிறே,Kulam ilang kalire - அக்குலத்திற்கு யானைக்குட்டி போன்றவனே! அடியனேன் பெரிய அம்மானே,Adiyanen periya ammanae - அடியேனுக்கு உன் பெருமைகளெல்லாம் காட்டின பிரானே! கடுத்த போர் அவுணன் உடல்,Kadutha por avunan udal - போர்புரிவதில் தினவு விஞ்சின இரணீயாசுரனுடைய உடலை இரு பிளவு ஆ,Iru pilavu aa - இரு துண்டமாகும்படி கை உகிர் ஆண்ட,Kai ukir aanda - திருக்கையிலுள்ள நகங்களைக் கொண்டு காரியஞ்செய்த எம் கடலே,Em kadalae - எம்போல்வார்க்குக் கடல் போன்றவனே! இன்று,Inru - நான் விரும்புமிக்காலத்ல் அடுத்தது ஓர் உரு ஆய்,Aduthathu or uru aai - தகுதியான வொரு உருவைக் கொண்டவனாகி நீ வாராய்,Nee varai - நீ வருகின்றிலையே! (இப்படி நீ உபேக்ஷித் திருந்தாயாகில்) உமர்,Umar - என்போன்றவர்களான (உம்மைச்சேர்ந்த) பக்தர்கன் எங்ஙனம் தேறுவர்,Engnanam theruvar - (உன்னை ஸர்வரக்ஷகனென்று) எப்படி நம்புவர்கள்? |