Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3450 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3450திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (பிரானே! நீ உன்னை அடியார்களுக்கு விதேயனாக ஆக்கிவைத்திருக்குமிருப்பு ஒன்று உண்டன்றோ, அதையே நான் சிந்தித்து ஆறியிருப்பது. இப்போது அந்தக் குணத்திலும் அதிசங்கை செல்லாநின்றமையால் தரிக்க மாட்டுகின்றிலேனே! என்செய்வேனென்கிறார்.) 4
உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி உன் தனக்கு அன்பரான
இவர் உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
அமரது பண்ணி யகலிடம் புடை சூழ் அடுபடை யவித்த அம்மானே
அமரர் தம் அமுதே ! அசுரர்கள் நஞ்சே ! என்னுடை யார் உயிரேயோ !–8-1-4
அமர் அது பண்ணி,Amar adhu panni - அப்படிப்பட்ட பாரதயுத்தத்தை நடத்தி,
அகல் இடம் புடை சூழ்,Agal idam pudai soozh - பூமிப்பரப்பெங்கும் நிறைந்திருந்த
அடு படை,Adu padai - தொலைத் தொழிலில் வல்ல சேனையை
அலித்த,Alitha - தொலைத்த
அம்மானே,Ammanae - பெருமானே!
அமரர் தம் அமுதே,Amarar tham amudhe - தேவர்களுக்கு அமுதம் போன்று உயிர்ப்பிச்சையளிக்குமவனே!
அசுரர்கள் நஞ்சை,Asurargal nanjai - அசுரர்கட்கு விஷம் போன்றவனே!
என்னுடை ஆர் உயிரே ஓ,Ennudai aar uyirae o - எனக்கு அருமையான உயிர் போன்றவனே!
உமர் உகந்து உகந்த உருவம்,Umar uganthu ugantha uruvam - உன்னடியார்கள் எப்போதும் விரும்பிய ரூபமே
நின் உருவம் ஆகி,Nin uruvam aaki - நீ கொண்டருளும் ரூபமாகி.
உன் தனக்கு அன்பர் ஆனார் அவர்,Un thanakku anbar aanar avar - உன்னுடைய அந்த பகதர்கள்
உகந்து அகர்ந்த செய்கை,Uganthu agarndha seygai - உகந்து ஈடு படுகைக்கு இடமாக நீ செய்த செயல்கள்
உன் மாயை,Un maayai - உனது ஆச்சர்ய சேஷ்டிதங்கள் (என்று கொண்டிருக்கையாகிற)
அறிவு ஒன்றும்,Arivu ondrum - இந்த வொரு அத்யவஸாயத்திலுங்கூட
வினையேன் சங்கிப்பன்,Vinaiyen sangippan - பாவியேன் (இவை பொய்யோவென்று) கஙகைகொள்ள வேண்டியவனாகிறேன்.