| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3452 | திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (கீழில் பாட்டில் சொன்ன பொருளை விஸ்தரிக்கிறார்.) 6 | எங்கு வந்துறுகோ !என்னை யாள்வானே ! ஏழு லகங்களும் நீயே அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே பொங்கிய புறம் பாற் பொருளுளவேலும் அவையுமோ நீ யின்னே யானால் மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே–8-1-6 | என்னை ஆள்வானே,Ennai aalvaane - (இதுவரையில்) என்னை நிர்வஹித்துக்கொண்டு போருமவனே! எழ் உலகங்களும் நீயே,Ezh ulagangalum neeye - ஸப்தலோகங்களும் நீயிட்ட வழக்கு, அங்கு,Angu - அந்த லோகங்களில் அவர்க்கு அமைந்த,Avarkku amaindha - (பலன்களைக் கோருகின்ற) அவரவர்களுக்கு ஆராதிக்கும்படி ஏற்படத்தின தெய்வமும்,Dheyvamum - தைவங்களும் நீயே,Niyae - உன் அவயபூதங்கள் அவற்றவை கரும்மும் நீயே,Avatravai karummum niyae - அத்தெய்வங்களைக் குறித்து ஆராதனையாகப் பண்ணும் காரியங்களும் நீயிட்ட வழக்கு. பொங்கிய புறம்பால் பொருள் உள ஏலும்,Pongiya purambaal porul ula elum - இவ்வுலகங்களிற் காட்டிலும் விஞ்சிப் புறம்பட்ட பொருள்கள் எவ்வனவிருந்தாலும் அவ்வளவும் அவையும் நீ,Avaiyum ni - அவையும் நீயிட்டவழக்கு மங்கிய அரு ஆம் நேர்ப்பமும் நீயே,Mangiya aru aam naerppamum niyae - காரணாவஸ்தையில் சுருங்கிக் கிடக்கிறஸூக்ஷ்மசிதசித் வஸ்துக்களும் நீயிட்ட வழக்கு வான் புலன் இறந்ததும் நீயே,Vaan pulan irandhadum niyae - அவ்யக்தத்தையும் வியாபிக்கக்கூடியதாய் கண்முதலிய இந்திரியங்களுக்குப் புலப்படுத்தன்மையற்ற தான ஜீவஸமஷ்டியும் நீ யிட்ட வழக்கு. இன்னே ஆனால்,Innae anaala - இப்படியாமளவில், (உன்னை நான் எங்குவந்து உறுகோ? என்று கீழ்ப்பாட்டோடே அந்வயம்) |