| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3453 | திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (எல்லா பொருள்களும் உனக்கு வடிவாய்க்கொண்டு சேஷமாய் நீயே அவற்றுக்கு ப்ரகாரியாய் – சேஷியாயிருக்கிறாயென்கிற அறிவு ஒன்று கொண்டு தரித்திருக்கிற நான் என்பாபத்தாலே அதிலும் அதிசங்கைபண்ண நேர்ந்துவிட்டதேயென்று நோகிறார்.) 7 | இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ யின்னே யானால் சிறந்த நின் தன்மை யது விது வுது வென்று அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுளமுதமே !அமுதிற் பிறந்த இன் சுவையே ! சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேராயா !–8-1-7 | கறந்த பால்,Karandha paal - அப்போது கறந்தபால் போல் இனியனானவனே! நெய்யே,Neiyae - அதில் ஸாரமான நெய் போன்றவனே! நெய்யின் இன் சுவையே,Neyin in suviyae - நெய்யின் இனிமையான சுவைதானே வடிவெடுத்ததுபோன்றவனெ! கடலினுள் அமுதமே,Kadalinul amudhamae - கடலில் தோன்றிய அமுதம் போன்றவனே! அமுதில் பிறந்த இன் சுவையே,Amudhil pirandha in suviyae - அமுதிலுள்ள இனிமையான சுவைதானே வெடுத்தவனே! சுவை அது பயனே,Suvai adhu payanae - அவ்வினிமையினுலுண்டாகும் ஆனந்தமே! பின்னை தோள் மணந்த பேர் ஆயா,Pinnai thol manandha per aayaa - நப்பின்னைப்பிராட்டியை மணம்புணர்ந்து கோபால க்ருஷ்ணனே! இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ,Irandhadum niyae edhindhadum niyae nigazhvadho ni - முக்காலங்களிலுமுள்ள பொருள்களும்ந யிட்ட வழக்கு இன்னே ஆனால்,Innae anaal - இப்படியான பின்பு அது இது உது,Adhu idhu udhu - தூரஸ்தமாயும் ஸமீபஸ்தமாயும் மத்யஸ தமாயுமுள்ள ஸகல பரார்த்தங்களும் சிறந்த நின் தன்மை,Sirandha nin thanmai - பரபரனான உன்னுடைய ஸவபாவங்கள் என்ற அறிவு ஒன்றும்,Enra arivu ondrum - என்கிற இவ்வறிவு தன்னிலும் வினையேன் சங்கிப்பன்,Vinaiyen sangippan - பாவியேன் அதிசங்கை கொள்பவனாயிரா நின்றேன். |