| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3454 | திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (ஆழ்வீர்! உம்முடைய அபேக்ஷிதம் நாம் செய்ய வேணுமாகில் அதற்கு உறுப்பாக ஓர் அஞ்ஜலியாவது பண்ணமாட்டீரோவென்ன, பிரானே! நானாகச் செய்வதென்று ஒரு செயலுண்டோ? மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீயிட்டவழக்கான பின்பு என்னாலொரு செயலுண்டோ? நீ தானே என்னை வணங்குவித்துக்கொள்ளவேணுமே யல்லது நான் வணங்குவதாக ஒன்று அறியேன் என்றார்.) 8 | மணந்த பேராயா !மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற குணங்களை யுடையாய் !அசுரர் வன்கையர் கூற்றமே ! கொடிய புள்ளுயர்த்தாய் ! பணங்கள் ஆயிரம் உடைய பைந்நாகப் பள்ளியாய் ! பாற் கடல் சேர்ப்பா ! வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே–8-1-8 | மாயத்தால் மணந்த பேர் ஆயா,Maayathaal manandha per aayaa - மிகுந்த ஆசையினால் நப்பின்னையே மணந்து கொண்ட பெருமை தங்கிய கோபாலனே! முழுதும்,Muzhudhum - உன்னுடைய ஒரு குணமும் தப்பாதபடி வல்வினையேனை ஈர்கின்ற குணங்களை உடையாய்,Valvinaiyenai eirkindra gunangalai udaiyaai - பாவியேனை இருபிளவாக்குகின்ற திருக்குணங்களை யுடையவனே! வன்கையர் அசுரர் கூற்றமே,Vankaiyar asurar kutrame - வன்மையை யுடையவர்களான அசுரர்களுக்கு யமன் போன்றவனே! கொடிய புள் உயர்த்தாய்,Kodiya pul uyarththaai - அவ்வசுரர்களுக்குக் கொடுமைபுரியுமியல்லின்னான் பெரிய திருவடியை த்வஜமாகக் கொண்டவனே! ஆயிரம் பணங்களும் உடைய பை நாகம் பள்ளியாய்,Aayiram panangalum udaiya pai naagam palliyaai - ஆயிரம் படங்களையுடைய பரந்த ஆதிசேஷனைப் படுக்கையாகக்கொண்டு பால் கடல் சேர்ப்பா,Paal kadal saerppaa - திருப்பாற்படலில் கண் வளர்ந்தருளுகிறவனே! மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே,Manamum vaasagamum seigaiyum yaanum ni thaanae - மநோவாக் காயங்களாகிற கரணங்களும் அவற்றை யுடைய நானும் நீயிட்ட வழக்காயிருக்க வணங்கும் ஆறு அறியேன்,Vanangum aaru ariyaen - சுதந்திரமாக வணங்கும் வழயறிகின்றிலேன். |