Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3455 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3455திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –சகல பதார்த்தங்களும் உனக்கு சேஷமான பின்பும் இந்த ஞானத்தோடு சம்சாரத்திலே இருந்ததோடு வாசி இல்லை யாகிலும் சேஷத்வ ஞான விரோதியான சம்சாரத்திலே இருக்க அஞ்சா நின்றேன் -இதுக்கு அனுகூலமான திரு நாட்டிலே என்னைக் கொடு போக வேணும் என்கிறார்.) 9
யானும் நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–8-1-9
யானும் நீ தானே ஆவது மெய்யே,Yaanum ni thaanae aavadhu meiyae - (எல்லாமும் நீயாகையாலே) யானும் நீதானே யென்கிறவிது உண்மையே, (இதில் ஒரு ஸந்தேஹமில்லை)
அரு நரகு அவையும் நீ,Aru naragu avaiyum ni - என்னால் பொறுக்கமுடியாத ஸம்ஸாரத்திலுள்ளவையெல்லாம் நீயிட்ட வழக்கே,
ஆனால்,Anaal - ஆனபின்பு
வான் உயர் இன்பம் எய்தில் என்,Vaan uyar inbam eidhil en - திருநாட்டிலே போய்ச் சிறந்த ஆனந்தத்தைப் பெற்றிருந்தாலென்ன?
மற்றை நரகமே எய்தில் என்,Matrai naragame eidhil en - அதற்கெதிர்த்தட்டான ஸம்ஸாரநரகத்தை யடைந்தால் தானென்ன?
எனிலும்,Enilum - என்று இப்பொருளுண்டேயாகிலும்,
யானும் நீ தான் ஆய் தெளிதொறும்,Yaanum ni thaan aai thelidhorum - நான் உனக்கடியேனென்பதை யுணரும்போதெல்லாம்
நரகம் நான் அடைதல் நன்றும் அஞ்சுவன்,Naragam naan adaithal nandrum anjuvan - ஸம்ஸார நரக வாழ்க்கைக்கு மிகவும் பயப்படா நின்றேன்,
நான் உயர் இன்பம்,Naan uyar inbam - பரமபதப் பேரின்பத்தை நிரந்தரமாகவுடையையாய்க்கொண்டு எழுந்தருளி யிருக்குமவனே!
நின் தாள்களை எனக்கு அருளு,Nin taalgalai enakku arulu - உன் திருவடிகளை எனக்குத் தந்தருளவேணும்.