| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3456 | திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (நானாசைப்பட்டபடியே திருவடிகளை யெனக்குத் தந்தருளின சிறந்தவுதவிக்குத் கைம்மாறாக இவ்வாத்மவஸ்துவை எம்பிரானே! உனக்கு அர்ப்பணஞ் செய்தேனென்கிறார்.) 10 | தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் ! தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10 | தாள்களை எனக்கே தலைத்தலை சிறப்ப தந்த,Taalgalai enakke thalaiththalai sirappa thanda - (உனது) திருவடிகளை எனக்கே அஸாதாரணமாகத் தலைமேல் சிறக்கும்படி தந்தருளின பேர் உதவி,Per uthavi - மஹோபகாரத்திற்கு கைம்மாறு ஆ,Kaimmaru aa - பிரதியுபகாரமாக, என் உயிரை,En uyirai - எனது ஆத்மவஸ்துவை தோள்களை ஆர தழுவி,Tholgalai aara thazhuvi - தோள்களை நன்றாகத் தடவிக் கொடுத்து அறவிலை செய்தனன்,Aravilai seithanan - பரிபூரண விக்ரயம் செய்து விட்டேன் சோதீ!,Sothee! - நான் தந்தவிதனைப்பெற்று அபூர்வலாபம் பெற்றதாகக் களித்து விளங்குமவனே! தோள்கள் ஆயிரத்தாய்,Tholgal aayiraththaai - (அந்தக்களிப்பினாலே பணைத்த) பலபலதிருத்தோள்களையுடையவனே! முடியன் ஆயிரத்தாய்,Mudiyan aayiraththaai - பலபல திருமுடிகளையுடையவனே! துணை மலர் கண்கள் ஆயிரத்தாய்,Thunai malar kangkal aayiraththaai - ஒன்றோடொன்றொத்த மலர் போன்ற பலபல திருக்கண்களையுடை வனே! தாள்கள் ஆயிரத்தாய்,Taalgal aayiraththaai - பலபல திருவடிகளையுடையவனே! பேர்கள் ஆயிரத்தாய்,Pergal aayiraththaai - பலபல திருநாமங்களை யுடையவனே! தமியனேன் பெரிய அப்பனே,Thamiyaen periya appane - அகிஞ்சநனான வெனக்கு இன்னமும் எவ்வளவோ செய்யப் பாரித்திருக்குமவனே! |