| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3458 | திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –எம்பெருமானை ஆசைப்பட்டு அவன் உகந்து அருளின இடங்களிலே சென்றும் அபேக்ஷிதம் பெறாமையாலே மிகவும் அவசன்னையாய் இருக்கிற இப்பிராட்டியை தோழிமாரானவர்கள்-யுகாவாதார் எதிர் அன்றோ லஜ்ஜிக்க வேண்டுவது -எங்களுக்கு லஜ்ஜிக்க வேணுமோ - உனக்கு ஓடுகிற தசையைச் சொல்லு -என்ன -அவர்கள் எதிர் லஜ்ஜித்து சொல்லாதே உங்களுக்கு சொல்லாமல் வார்த்தை பார்த்த இடத்திலும் ஒன்றும் காண்கிறிலேன்-என்கிறார் .) 1 | நங்கள் வரி வளை யாயங்களோ நம்முடை ஏதலர் முன்பு நாணி நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம் நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன் சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன் வெங்கண் பறவையின் பாகன் எங்கோன் வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1 | வரி வளை நங்கன் ஆயங்காளோ,Vari valai nangan aayangkaalo - அழகியவனையணிந்த நம்முடைய தோழிகளே! நம்முடை ஏதலர் முன்பு நாணி,Nammudai yethalar munbu naani - நம்மிடத்துப் பகைபாராட்டுகின்ற தாய்மாரின் முன்புசொல்ல வெட்கப்பட்டு நுங்கட்கு யான் உரைக்கும் மாற்றம் ஒன்றுநோக்குகின்றேன்,Nungadkku yaan uraikkum maattram ondrunookkugiren - உயிர்த் தோழிகளான வுங்களுக்கு மாத்திரம் செவிப்படும்படி நான் ஒரு வார்த்தை சொல்லப்பார்க்கின்றேன், எனக்கும் காணமாட்டேன்,Enakkum kaanamaaten - ஆனாலும், என்னுடைய நிலைமையை நான் ஒரு விதத்திலும் பாசுரமிட்டுச் சொல்லும் வழி அறிகின்றிலேன், (ஆகிலும் சொல்லுகேன் கேண்மின்) வெம் கண் பறவையின் பாகன் எம் கோன்,Vem kan paravayin paagan em koon - வெவ்வியபார்வையையுடைய பெரிய திருவடியை நடந்துமவனாய் அஸ்மத்ஸ்வாமியான வேங்கடம் வாணனை வேண்டிசென்று,Vengadam vaananai vendi sendru - திருவேங்கடமுடையானைக் காணவாசைப்பட்டுப் புறப்பட நினைத்ததுவே காரணமாக சங்கம் சரிந்தன சாய் இழந்தேன்,Sangam sarindana saai izhandhen - கைவளைகள் கழன்றனவென்னும்படி இளைத்தேன், மேனியொளியை இழக்கப்பெற்றேன் தடமுலை பொன்நிறம் ஆய் தளர்ந்தேன்,Thadamulai ponniram aay thalarnthen - தடமுலைகள் பசலைநிறம்பூச்சுப்பெற்று உடலும் தளர்ந்தவளாளேன். |