| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3459 | திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –உனக்கு அத்யந்தம் அந்தரங்கைகளாய் இருக்கிற எங்களுக்கு உன்னுடைய நோவு சொல்லலாகாததும் உண்டோ -என்ன - என் துக்கத்தின் மிகுதியாலே உங்களுக்குச் சொல்லும் பாசுரம் அறிகிலேன் என்கிறாள்.) 2 | வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில் என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும் ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ காண்கின்றிலேன் இடராட்டியேன் நான் காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால் ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2 | ஒன்று வேண்டி சென்று,Onru vendi sendru - என்னிடத்தில் ஒன்றைய்யே க்ஷித்து வந்து பெறுகின்றவரில்,Perugindravaril - பெறுகின்றவர்களுக்குள்ளே என்னுடைய தோழியர்,Ennudaiya thozhiyar - தலைமைபெற்ற உயிர்த்தோழிகளான நுங்கட்கேலும்,Nungatkkaelum - உங்களுக்குங்கூட ஈண்டு இது உரைக்கும் படியை,Eendu idhu uraikkum padikai - இப்போது எனக்கு ஓடும் நிலைமையைப் பாசுரமிட்டுச் சொல்லக்கூடிய பிரகாரத்தை இடராட்டியேன் கான் அந்தோ காண்கின்றிலேன்,Idaraattiyen kaan andho kaangindrilen - இடருற்றிருக்கிற நான் ஐயோ! அறிகின்றிலேன், காண்தகு தாமரை கண்ணன்,Kaandhaku thamarai kannan - காணவினிய தாமரைபோன்ற திருக்கண்களை யுடையவனாய் கள்வன்,Kalvan - பார்த்த பார்வையிலே ஸர்வ ஸ்வாபஹாரம் பண்ண வல்ல வஞ்சகனாய் விண்ணவர்கோன் எங்கள் கோனை,Vinnavarkon engal konai - நித்யஸூரிகளைப் போலே என்னை யடிமை கொண்வனான எம்பெருமானை கண்டால்,Kandaal - காணப்பெற்றால் ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்,Eendiya sangum niraiyum kolvaan - அவன் பக்கலிலேதிரண்ட வளைகளையும் அடக்கத்தையும் மீட்டுக் கொள்ளலாமென்று எத்தனைகாலம் இளைக்கின்றேனே,Ethanaikalam ilaikkindren - எத்தனையோகாலமாக ப்ரயாசைப்படுகின்றேனே. |