| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3461 | திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (ஆழ்வார்திருநகரியைச் சார்ந்த நவதிருப்பதிகளுள் நிருக்குளந்தை யென்பது ஒரு திருப்தி. இது பெருங்குளமென்று வழங்கப்படும். அத்தலத்திலுள்ள எம்பெருமான் மாயக்கூத்தன், அப்பெருமானிடத்து ஆழ்வார் தமக்குள்ள ஈடுபாட்டைச் சொல்வது இப்பாசுரம்.) 4 | கூடச் சென்றேன் இனி என் கொடுக்ககேன் கோல் வளை நெஞ்சத்து தொடக்கம் எல்லாம் பாடற்று ஒழிய இழந்து வைகல் பல்வளையார் முன்பு பரிசு இழந்தேன் மாடக் கொடி மதிள் தென் குளந்தை வண் குடபால் நின்ற மாயக் கூத்தன் ஆடற் பறவை யுயர்த்த வெல் போர் ஆழி வலவனை யாதரித்தே–8-2-4 | மாடம் கொடி மதிள் தென் குளந்தை,Maatam kodi madil then kulandhai - மாடங்கயும் கொடியணி மதிள்களையுடைய்ய பெருங்குளமென்னுந்திருப்பதியிலே வண் குடபால் நின்ற மாயக்கூத்தன்,Van kudapaal ninra maayakkooththan - அழகிய மேற்பக்கத்திலே நின்ற மாயக்கூத்தப் பெருமானாய் ஆடல் பறவை உயர்ந்த,Aadal paravai uyarntha - மகிழ்ச்சியினால் களித்தாடுகிற கருடனாலே வஹிக்கப்பட்டிருப்பவனாய் வெல் போர் ஆழிவலவனை,Vel poar aazhi valavanai - போர்க்களத்தில் வெற்றிபெறுமியல்வின்னான திருவாழி யாழ்வானை வலத்திருக்கை யிலுடையனான பெருமானை ஆதரித்து,Aadhariththu - ஆசைப்பட்டு கூட சென்றேன்,Kooda sendren - அவனோடு ஸம்ச்லேஷிக்கச் சென்றேன், கோல்வனை நெஞ்சம் தொடக்கம் எல்லாம்,Kolvanai nenjam thodakkam ellam - அழகியவளையும் நெஞ்சும் முதலானவையெல்லாம் பாடு அற்று ஒழிய இழந்து,Paadu attru ozhiya izhandhen - என்பக்கல் சேஷியாமல் விட்டுப்போம்படியாக இழந்து பல வளையார் முன் வைகல் பரிக அழிந்தேன்,Pala valaiyaar mun vaikil pariga azhindhen - பல வளைகளையுடைய பெண்டுகள் முன்னே நெடுங்கால மாகவே என் இயல்புமாறப் பெற்றேன் இனி என் கொடுக்கேன்,Ini en kodukkaen - (எல்லாமிழந்த நான்) இனி என்ன இழக்கக் கடவேன் |