| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3462 | திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அறியவும் எட்டவும் அரிதான நிலத்தை ஆசைப் பட்டு அதுக்கு துக்கப் படுகிறாய் என்று தோழிமார் சொல்ல -அவன் எத்தனையேனும் விசஜாதீயனாய் துர்ஜ்ஜேயனாய் இருந்தானே யாகிலும் -அவனை ஆஸ்ரயிக்கையும் அவனாலே விஷயீ கரிக்கப் படுகையும் இம்மரியாதை தான் தோற்றி யுண்டாயிற்றோ -இது அநாதி அன்றோ என்கிறாள்.) 5 | ஆழி வலவனை ஆதரிப்பும் ஆங்கவன் நம்மில் வரவுமெல்லாம் தோழியர்காள் ! நம்முடையமே தான் ? சொல்லுவதோ ?இங்கரியது தான் ஊழி தோறூழி யொருவனாக நன்கு உணர்வார்க்கும் உணரலாகா சூழலுடைய சுடர் கொளாதித் தொல்லை யஞ்சோதி நினைக்கும் காலே-8-2-5 | தோழியர்காள்,Thozhiyarkal - தோழியர்களே! நினைக்குங்கால,Ninaikkungal - ஆராய்ந்து பார்க்குமளவில் நன்று உணர்வர்க்கும் ஒருவன் ஆக உழிதோறு ஊழி உணரல் ஆகா,Nandru unarvarkkum oruvan aaga uzhidhoru oozhi unaral aaga - நன்றாக உள்ளபடி அறியவல்லார்க்கும் காலமுள்ளதனையும் அறிய முயன்றாலும் இத்தகையனென்று அறிய வொண்ணாதபடி சூழல் உடைய,Soozhal udaiya - அடியார்களை அகப்படுத்திக் கொள்ளும் சூழ்ச்சியாகிற சேஷ்டிதங்களையுடையனாய் சுடர் கொள் ஆதி,Sudar kol aadhi - மிகுந்த தேஜஸ்ஸையுடைய காரணபூதனாய் தொல்லை அம்சோதி,Thollai amsothi - நித்ய அஸாதாரண அப்ராக்ருத ஜ்யோதிர்மயரூபத்தை யுடையனாய் ஆழி வலவனை,Aazhi valavanai - திருவாழிவலவனான ஸர்வேச்வரனை ஆதரிப்பும்,Aadharippum - விரும்பி பணிகையும் ஆங்கு,Aangu - அப்படிப்பணியுமிடத்து அவன் நம்மில் வரவும் எல்லாம்,Avan nammil varavum ellam - அவன் நம்பக்கதில் வந்து சேருகையும் ஆகிய இவையெல்லாம் நம்முடையமே தான்,Nammudaiyamae thaan - நம்மைத் தோற்றிப் புதிதான உண்டாகப் பெற்றிருக்கிறோமோ? இங்கு சொல்லுவதோ! அரியதுதான்,Ingu solluvathO! Ariyathuthaan - அவன் விஷயத்தில் எதையாவது அவத்யமாகச் சொல்லிவிடுவது தகாது. |