| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3463 | திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (மறுபடியும் தோழியானவள் “நங்காய்! நீ சொல்லுகிறபடியே அவன் எளியனல்லன், அருமைப்பட்டவனே“ என்று சொல்ல, தோழீ! அவன் அரியனானாலென்ன? எளியனானாலென்ன? எந்த நிலையில் அவன் தன்னையே வாய்வெருவும்படியன்றோ நம்மைப்பண்ணிவிட்டான், அப்படிப்பட்டவன் வாசலிலே கூப்பிடாதே ஸம்பந்தமில்லாதார் வாசலிலே கூப்பிட ப்ரஸக்தியுண்டோ? என்கிறாள் தலைவி.) 6 | தொல்லை யஞ் சோதி நினைக்குங்கால் என் சொல்லளவன்று இமையோர் தமக்கும் எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும் அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான் அல்லி மலர்த் தண் துழாயும் தாரான் ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர் வல்லி வள வயல் சூழ் குடந்தை மா மலர்க்கண் வளர்கின்ற மாலே-8-2-6 | நினைக்குங்கால்,Ninaikkungal - ஆராயப்புகுமளவில் தொல்லை அம்சோதி என்சொல் அளவு அன்று,Thollai amsothi en sol alavu anru - அஸாதாரணமாய் அழகியதான அவனுடைய தேஜஸ்ஸானது என்னுடைய சொல்லில் அடங்கும்மதன்று இமையோர் தமக்கும்,Imayor thamakkum - தேவர்களுக்குங்கூட (நிஷ்கர்ஷிக்கவொண்ணாதபடி) எல்லை இலாதன கூழ்ப்பு செய்யும் அதிறம் நிற்க,Ellai ilaadhana koozhppu seyyum athiram nirka - அளவிறந்த ஸம்சயங்களை விளைக்கும்படியான அப்பெருமேன்மை கிடக்க, வல்லிவளம்வயல் சூழ குடந்தை மாமலர் கண் வளர்கின்ற மால் எம்மாமை கொண்டான்,Vallivalam vayal soozha kudandhai maamalai kannu valarkindra maal emmaamai kondaana - பூங்கொடியும் அழகிய வயல்களுஞ் சூழ்ந்த திருக்குடந்தையிலே சிறந்த தாமரை போன்ற திருகண்கள் வளரும்படி சாய்ந்தருளின பெருமான் எம்மேனி நிறத்தைக்கொள்ளை கொண்டான், அல்லி மலர் தண் துழாயும்,Alli malar than thuzhaayum - பூந்தாரினுடைய விகாஸத்தை யுடைத்தான திருத்துழாய் மாலையையும் தாரான்,Thaaran - அருள் செய்கின்றினை, இனி,Ini - இப்படியான பின்பு ஆர்க்கு பூசல் இடுகோ,Aarkku poosal idukko - (இத்துயரத்தை) வேறு யார் பக்கலிலே சென்று முறை யிடக்கடவோம்? சொல்லீர்,Solliir - நீங்களே சொல்லுங்கள். |