| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3464 | திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (அப்பெருமானைக் காண்பது அரிது, ஆகவே அவனை விட்டு விடுதலை நன்று என்று உறவு முறையார் அலைக்க, அவனுடைய திருக்குணங்களிலே அகப்பட்ட நான் எத்தனை காலமானாலும் அவனைக் கண்டல்லதுவிடேன், அதற்கு இடையூறான வுங்களோடு ஸம்பந்தம் எனக்கு வேண்டாவென்று உறவறுத்து உரைக்கின்றாளிப்பாட்டில்.) 7 | மாலரி கேசவன் நாரணன் சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு ஒன்றுமுருவுஞ் சுவடுங்காட்டான் ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் ! என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ? காலம் பல சென்றும் காண்பதாணை உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7 | ஏலம் மலர் சூழல் அன்னைமீர்காள்,Elam malar soozhal annai meerkaal - நறுமணம்மிக்க பூவையணிந்த குழலையுடைய தாய்மார்களே! என்னுடை தோழியர்காள்,Ennudai thozhiyarkal - என்னுடைய தோழிமார்களே! மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று,Maal ari kesavan naaranan seemadhavan govindan vaikundan enru enru - மாலே! ஹரியே! கேசவனே! நாராயணனே! ஸ்ரீமாதவனே! கோவிந்தனே! வைகுண்டனே! என்றிப்படி பலகாலுஞ் சொல்லி ஓலமிட என்னை பண்ணி விட்டு இட்டு,Olamida ennai pannni vittu ittu - கூப்பிடும்படியாக என்னைப்பண்ணி கைவிட்டு (எம்பெருமானானவன்) ஒன்றும் உருவும் சுவடும் காட்டான்,Onrum uruvum suvadum kaattaaana - ஒருபடியாலும் தன் வடிவையும் தன்னைக் கிட்டுவ தோரடையாளத்தையும் காட்டுகின்றிலன், என் செய்கேன்,En seigai - இதற்கு நான் என்ன பண்ணுவேன்! பல காலம் சென்றும் காண்பது ஆணை,Pala kaalam sendrum kaanbadhu aanai - காலமுள்ளதனையும் சென்றாகிலும் காணக்கடவே ளென்பது ஸத்யம் உங்களோடு எங்கள் இடை இல்லை,Ungaloodu engal idai illai - (இந்த அத்யவஸாயத்தைக் குலைக்கப் பார்க்கிற) உங்களுக்கு மெனக்கும் ஒரு ஸம்பந்தமுமில்லை. |